சனி, 4 செப்டம்பர், 2010

ஒவ்வொரு முறையும்

மரணங்களின் வலியை
தாண்டியது உன் நினைவு...

துன்பத்தின் உச்சியில்
கொண்டு சேர்க்கிறது உன் பிரிவு...

ஒரு முறை...
நிமிடங்களிடம் மண்டியிடுகிறேன்
மீண்டும் உன் நினைவை தூண்டாதே என்று...

மறு முறை...
கணங்களிடம் கையேந்துகிறேன்
உன் கனவோடு கரைந்து உயிர் போகவே...

என் கவனம்...
எல்லாவற்றையும் கட்டி போடுகிறது
உனது மெளனம்....

உள்ளுக்குள்ளே புதைத்து...
கல்லரை கட்டிய போதும்
புன்னகைத்து பூக்கிறது...

உயிரின் வேர் வரை சென்ற
உனது நினைவுகள் ஒவ்வொரு முறையும் !!

-வித்யாசன்




நினைத்து துடிக்கவே

இரவுகளின் கனவுகளில்
அடையாளம் பதிக்கிறது
உனது கால்தடம்...

நினைவுகளின் கரைகளில்
தழும்ப ஓடுகிறது
உனது ஞாபகங்கள்...

இரவின் மடியில்
தனியாய் விழித்திருக்கிறோம்
நிலவும், நானும்...

நிமிடங்களின் இடையே
குடை பிடித்து காத்திருக்கிறேன்
உன் நிழல் விழும் திசையை நோக்கி...

கணங்களுக்கு ம
த்தியில்
கடை விரித்து எதிர்பார்க்கிறேன்
நீ கடந்து போக கூடும் என்று...

உன்னோடு இருந்த
காலங்களை தேடி அலைகிறேன்
அங்கே நான் எங்கே வாழ்கிறேன் என்று...

உடைந்த கண்ணாடியிலும்
உன் உருவம் பார்க்கிறேன்
என் பார்வை நீதானா என்று...

உதிர்ந்து உலவும்
இலைகளிடம் கேட்கிறேன்
நீ இருக்கும் இடம் அறியுமா என்று...

அலையும் காற்றிடம்
சொல்வதுண்டு
நீ சுவாசித்த
மூச்சு காற்றை மட்டும் சுமந்து வா என்று...

மண்ணும், நெருப்பும்
என்னை திண்ணும் போதும்
இதயம் விட்டு வைக்க கேட்பேன்...

எப்பொழுதும்
உன்னை நினைத்து துடிக்கவே !!


-வித்யாசன்

சாபமிடு ,சாபம்கொடு

சுடும் சொல் ஒன்று: சொல்லி விடு
இல்லையேல் உன் சுட்டு விழியால்
எனை கொன்று விடு...

மறு மொழி ஒன்று கூறிவிடு
இல்லை, எனை கொல்லும்
மருந்தொன்று தந்துவிடு...

ஒருமுறை எனை தண்டித்துவிடு
இல்லை உன் உயிரை
நீயே துண்டித்துவிடு...

தவறுக்கு
மெளன தண்டனை வேண்டாம்
மன்னித்து விடு
மறு ஜென்மம் எனக்கு
அளித்து விடு...

இல்லையேல்
இவன் இன்றோடு
அழிந்து போகட்டும் என்று
சாபமிடு ,சாபம்கொடு !!

அன்பு மலர்

விதி விலக்கா


உனக்கு
உலகமே
நிசப்தமானது
என் மெளனத்தால்...

தனிமை
உலகத்தில்
நீ‡தள்ளப்பட்டாய்
நான் தள்ளிவைத்ததால்..

நீ கதறுகிறாய்
நான் இருதய
கதவை அடைத்ததும்...

உனக்குள்
பூகம்ப புலம்பல்கள்
நான் கோபித்ததும்...

வெறுமையின்
உச்சத்தில் -நீ
நான்- உனை
வெறுத்து விட்டதால்..

எனக்குள்
அனுதாபம் ஏற்படுத்தவில்லை
நீ சொன்ன வார்த்தைகளும்
செய்த செயல்களும்...

துடிதுடித்து
நீ ஏங்கினாலும்
நடிப்பு என்றுதான் தோன்றுது...


எனக்காக வா
இவ்வளவும்
என்று யோசிக்கும்
போது
என் அழகும் கொஞ்சம் கூடுது...

மாண்டு விடுவாயா ?
மறந்து விடுவாய ?

இல்லை...

காய்ந்து விடுவாய ?
கடந்து விடுவாயா ?


இல்லை...

சாய்ந்து விடுவாயா ?
ஓய்ந்து விடுவாயா ?

என்ன செய்ய போகிறாய்
நான் இல்லாது ?

கவி எழுதி எழுதி
கரைந்து போவாயா ?

கன்னம் வீங்க வீங்க
அழுது கவிழ்வாயா ?

உன் கைகள் ஏந்தி
காதல் பிச்சை கேட்க போகிறாயா ?

இன்னும் கேள்விகள்
இரு வானம் அளவுக்கு
இருக்கு-உன்னிடம்...

ஒரு வேளை
நீ இல்லாமல் போன பிறகுதான்
புரிவேனோ
உன் அன்பினை..

எதுவாக இருந்தாலும்
சரி
பொதுவாகவே
நிஜமான காதலுக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா ?

 -வித்யாசன்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொலைந்து போன நட்பு

நெருங்கி பழகும் வேளையில்
தெரியவில்லை
நொருங்கி போகும் என்று..

கைகோர்த்து நடந்த கணத்தில்
கவனிக்கவில்லை
வெகுதூரம் செல்வாய்என்று...

துணையாக இருந்த தருணத்தில்
உணரவில்லை
துயரமாக போவது என்று...

புன்னகைத்து பூரித்த பொழுதில்
புரியவில்லை
கண்ணீரை பரிசளிப்பாய் என்று...

தவறு செய்த நிமிடத்தில்
அறியவில்லை
தடையாக இது மாறுமென்று...

தொலை தூர வாழ்க்கையில்
தொலைத்து விட்டு வழி நெடுக
தேடுகிறேன்...

தூய்மையான
என் தோழமையை
நீ...
( வருவாய் ) மன்னிப்பாய் என்ற நம்பிக்கையில் !!



                                                                                         -Vidhyasan@gmail.com

புதன், 1 செப்டம்பர், 2010

பாரதி

சிறந்த கவி

கால்தடம்

முதுமை

நன்று

குடை

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கடிதம்

தூரங்கள் துயரங்களானது
பாசத்தை விற்று பணம் ஈட்டுவதால்

எல்லா வசதிகளும் இங்குண்டு
உன் மடியில் தலை சாய்த்து
தூங்க மட்டும் முடியாது

புயல் வேகத்தில் பறக்கும் வாழ்க்கை;
புழுதி உடுத்தியதால் நீ அடித்த
அந்த நாட்கள் போலில்லை

சவர் குளியல், சுவர் அளவு கண்ணாடி
இருந்து என்ன பயன், ஆற்றங்கரை, பம்பு செட்டில்
ஆடையோடு குளித்த ஈர வாடை இன்னும் உளரவில்லை

இங்கு ஒவ்வொரு விரலுக்கும்
பல நூறு உணவு கொட்டிக் கிடக்க; ஏனோ
நீ ஊட்டிய நிலாச் சோறு தேடுது என் நாக்கு

வித விதமாய் புத்தாடை;
மழை சொட்டும் நேரதத்தில் நீ மூடும்
கிழிந்த முந்ததனையின் சுகம் இதிலில்லை

எடுப்பு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்‡ எனை
இடுப்பில் தூக்கிக் கொண்டே‡நீ
அடுப்பில் வேலை பார்த்த அதிகாரம் இன்றில்லை

விஞ்ஞான வளர்ச்சியில்
மின்அஞ்சல், அலை பேசி நம் இடைவெளியை
குறைத்தாலும், கனத்த நெஞ்சோடுதான் நாளும்

அம்மா...
உனை அழ வைக்கவே எழுதுகிறது இந்த கடிதம்

இப்படிக்கு
உன் மனசு .

மு.வித்யாசன் 

புதுமை

காலத்தின் பரிசு
தேடலின் பதில்

ஆசையின் விளைவு
எல்லோருக்குள்ளும் நுழைவது

கனவுகளின் பிம்பம்
ஒவ்வொரு கணமும் நிகழும்

மாற்றத்தை விட்டுச் சென்று
நம்மிடையே ஏக்கத்தை ஏற்படுத்துவது

புதுமை !!
 


மு.வித்யாசன்
பண்பாளர்
 

காதல்

சொல்லி, சொல்லி
சுவைக்க கூடிய சுவை

அள்ளி, அள்ளி
பருக கூடிய பானம்

இதிகாச கதைகளின்
அச்சாணி

இனம், மதம், ஊனம்
தாண்டிய உன்னதம்

உணர்வுகளை நெய்யும்
ஆயுதம்

உருவமில்லாது உலவும்
அற்புதம்

மூடனையும் கவிஞனாக்கும்
முள்ளையும் ரசிக்க வைக்கும்

பட்டாம் பூச்சி முதல்
தூசு வரை நுழைந்து பார்க்கும்

நூலாம்படையில் கூட
நூலகம் தேடி பிடிக்கும்

அறவியல் கண்டுபிடிக்க
முடியாத அதிசியம்

ஆதாம், ஏவாலின்
ஆதி ரகசியம்

காதலை..
எழுதிவிட்டனர்
கவிஞர்கள் கோடி...

ஒவ்வொரு நிமிடமும்
கவிஞர்களை கருதரிக்கிறது
காதல்
உடலுறவின்றி !!


மு.வித்யாசன்

பயந்து போன துண்டு

என் தாத்தா சொன்னது போல்...

ஒற்றைக் கால்
வானத்தை தொடும் உயரம்
பத்துக்கும் மேற்பட்ட கைகள்
அந்தரத்தில் தொங்கியபடி கருவிழி

நான் பயந்து போன துண்டு
எனது கிராமத்து.

தென்னை மரங்களை பார்த்து !!
(குட்டி பைய்யனா இருந்தப்ப)

மு.வித்யாசன்

கனவு

தலையனை திரைக்குள்
பதிவு செய்யப்படாத காட்சி

இமைகளின் கதவுகள் சாத்தியதும்
நினைவுகள் சொல்லும் கதை

விழித்ததும் கலைந்து போகும்
புரியாத விடுகதை


மறந்த போன கனவு
நினைவுக்கு வருவதுண்டு


எப்போதாவது அது
நிஜமாகும் பொழுது!!


 மு.வித்யாசன்

கோடையில் மழை

கோடிட்ட இடங்களை
நிரப்ப வருமா ?

கோடையில்
மழை !!
 

அனுமதி

சிரிப்பது என்றால்
என் இதழ்களும்


அழுவது என்றால்
என் இமைகளும்


என்னவோ...

உன்னை மட்டும்
பக்கத்தில் அனுமதிக்கிறது
!!

மு.வித்யாசன்

தாங்கும் பிரிவை தா



பள்ளி விடுமுறை காலத்தில்
துள்ளி குதித்த மனது...


அலுவலக பணி முடிவடைந்ததும்
ஆர்ப்பரித்த இருதயம்...

உன்னை பிரிய நேர்ந்ததும்
ஏனோ ...

முன்னே சொன்ன காலத்தை
நோக்கி பின்னே செல்கிறது


தாங்கும் பிரிவை தா என்று !!



மு.வித்யாசன்

தடங்களை நோக்கி

பிறப்பு இளமை நோக்கி
இளமை முதமை நோக்கி
முதுமை இறப்பை நோக்கி
இறப்பு இன்னொரு பிறப்பை நோக்கி
விநோத வாழ்க்கை பயணத்தில்
பெறுவதும், இழப்பதும்
ஞாபக தடங்களை நோக்கி !!

மு.வித்யாசன்.

குடைகள்

 மு.வித்யாசன்

ஓவியங்கள்

விரல்களும் இல்லை
துரரிகையும் இல்லை
விண்ணில் வித விதமான
ஓவியங்கள்...
வரைந்து பழகுகிறது மேகங்கள் !!
மு.வித்யாசன் 

தோழமையோடு

ஏதோ இனம் புரியாத நேசம்
எனக்குள் எல்லையில்லாத இன்பம்
உனக்கும், எனக்கும் உண்டான பாசம்
தூரத்தில் நாம் இருவர் இருந்தாலும்
தூய்மையான அன்பு துணை நிற்கிறதே
தூயவளே....
எப்பொழுதும் நாம் நாமாக இருப்போம்
தாய்மையின் பாசம் மாறாது தோழமையோடு !!
மு.வித்யாசன்

உனதாகிறது

என்னை சுற்றி நடப்பது
எதுவாகினும்

எல்லாம்
உனதாகிறது...

உன்னைச் சுற்றி நிகழ்வது
எனதாவதால் !!

நீ இல்லாததால்



நீ படிக்க கவிதையானது

என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது

வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது

மதிய உணவு இடைவேளை
நீ இருக்க எனக்கு சுற்றுலாவானது

சிறப்பு வகுப்பறை
நீ இருக்க பண்டிகை தினமானது

பல வருட கரும்பலகை
நீ எழுத வண்ண திரையரங்கானது

முதல் முறையாக
விடுமுறை நாட்கள் எல்லாம் அனாதையானது

நீ இல்லாததால் !!






மு.வித்யாசன்

நீயும்

தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்

கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்

சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்

தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை

என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்

அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை

வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!

மு.வித்யாசன்

கொடுமையானது

உளிகள் வாங்கும் வலிகளை விட
கொடுமையானது...

என் மீது விழும் 
உனது விழிகளின் அடிகள் !!

மு.வித்யாசன்

நமக்கு மட்டும் புரிந்த ஒன்று

எப்பொழுதும் உன்னோடு இருக்கவே
ஆசைப்படுகிறது என் பயணம்


உன் மடிமீது துயில் கொள்ளவே
பிரியப்படுகிறது என் இமைகள்

உனக்குள் புதைந்து புதுப் புது
பிறவி எடுக்க தவிக்கிறது என் மனது


உன்னை தீண்டும் தென்றலையும்
தடைவிதிக்க நினைக்கிறது என் கனவு


உன்னோடு கழியும் பொழுதுகளை
மட்டும் அனுமதிக்கிறது என் காலம்


இந்த உலகத்தில்
நீயும். நானுமாக வாழ்வதையே
எதிர்பார்க்கிறது என் உலகம்


யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாத
நேசம் என்னோடது என்று நமக்கு
மட்டும் புரிந்த ஒன்று !!
 

இன்னும்

யாரும் ...
அழைத்து விடாதீர்கள்

உணவு பஞ்சம் இல்லாத உலகத்தில்
எனது உறக்கம்

இன்னும்...
கொஞ்சம் காலம்தான் !!

இன்று

மனதுக்குள் இன்று இனிக்கும்
பூக்களின் வாசம்

மழை பொழிந்தும் ஒரு துளி கூட
நனையாத புது மயக்கம்


ஏனோ இடம் மாறி தோனறியது
இயற்கையின் வழக்கம்


ஒரு குடையாக மாறியதாய்
வானம் மெய்மறக்கும்

முதல் முறையாக
அன்பில் சிறகு விரித்து பறக்கிறது
இதயம் முழுக்கும் !!


மு.வித்யாசன் 

தாய்மை


ஆண்கள் அடைய முடியாத
அற்புதம்

மனித இனத்தை உருவாக்கும்
கருவறை


சுமைகளில் சுகம் காணும்
சூத்திரம்


சொர்க்கம் தங்கிபோகும்
உலகம்


பெண்மையின் தன்மைக்கு
இலக்கணம்

கணவனுக்கு மனைவி அளிக்கும்
மாபெரும் பரிசு

உணர்வுகளுக்கு மட்டும் கிட்டும்
பேரின்பம்

மண்ணில் பெண்மை எழுதும் உயிர்மை
தாய்மை !!



மு.வித்யாசன்

உயர்ந்த புத்தம்

ஒரு நூலகம் கையில்
புத்தகம்

ஒரு இலக்கணத்தின் விரல்களில்
அகப்பட்ட வார்த்தை

பூவின் மடியில்
ஒற்றை இதழ்

கவிதை படித்து பார்க்கும்
காகிதம்

உலகத்தில் இதை விட ஏதுண்டு
உயர்ந்த புத்தம் !!



மு.வித்யாசன்

முன்னோட்ட கோலம்


மின்னி மறையும்
வெள்ளை நதிகள்

இலையதிர் காலத்தை காட்டும்
வானத்தின் கிளைகள்
பூமியை புகைப்படம்
எடுக்கும் கேமரா

மேகம் அணிச்சமாக செல்லும்
வெளிச்ச சாலை
வானமும்.மேகமும் உரசியதால்
உண்டான தீப்பொறி

முத்த மழை தொடுக்க விண்ணின் தேகத்தில்
தென்படும் நரம்பு

ஒரு கணத்தில்,வான் கன்னத்தில்
முத்தமிட்டு மறையும் தழும்பு

புவியை தொட்டு விளையாடும்
வான விரல்கள்

மழை எனும் புள்ளி வைக்க
வானம் இட்ட முன்னோட்ட கோலம்
மின்னல் !!


மு.வித்யாசன்