வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இன்னும் இன்னும்

இதுவரை...
தூசுபடிந்த இடம்
தூங்கா சொர்க்கமானது
நீ வந்ததும்...

சில நொடிக்கு முன் வரை
இது...
பாலைவம் என்றவர்கள்
பால் நிலா உவா வரும்
விண்ணுலகம் என்றனர்
உன் பார்வை பட்டதும்...


வெறும் மூங்கில் காடு
இதுவென்று வட்டமிட்ட வண்டுகள்
தேன் கூடு என்று தேனீக்களுக்கு
தகவல் சத்தம் கொடுக்கிறது
உன் விரல் பட்டதும்...

விழுந்ததும்அருவம் தெரியாது
உடைந்திடும் மழைத்துளி...
ஊஞ்சல் என்றும்,அருவி என்றும் பாய்ந்ததாம்
என் தோழிலும், மாரிலும் விழுகையில்...

புழுதிகளை உடுத்திக் கொண்டு
புலம்பிய பூங் காற்று...
புதுப் புலவராக மாறி
ம்ம்... என்ற சத்தமும் கவிதையயன்றதாம்
உன் மூச்சுக்காற்றாய் நுழைந்ததும்...

கைதட்டி, கைகாட்டி
வரவேற்று,வழி அனுப்பிய மர இலைகள்...
விசிறியாகவும், தலையாட்டி பொம்மையாகவும்
உதிரும் இதயமாகவும்,காதல் கடிதமாகவும் உருமாறி போகிறது
நீ கடக்கும்
(தவறு)
மிதக்கும் தருணத்தில்...


சுட்டு பார்த்த சூரியனுக்கு
கொதிக்கும் காய்சலாம்
தெரிந்தும் மீண்டும், மீண்டும் சுடுகிறது
உன் மேனி தொட்டு பார்த்து காய்ச்சல் கூட்ட...

விந்தையின்
சந்தையில்
விலை கேட்கிறது
இயற்கையை
உன் அழகா?

அல்ல ...


அசைந்து, இசைந்து
குவிந்து,வளைந்து
நெளிந்து, உலர்ந்து
சிவந்து,முதிர்ந்து
இன்னும் இன்னும்
என்று எல்லாவற்றையும்
சுட்டு விரல் நீளத்தில்
சுட்டிலுக்கும்
சூட்சமம் கொண்ட
உந்தன்
இரட்டை இதழ்தான் !!

--------------------Mvidhyasan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக