வியாழன், 23 செப்டம்பர், 2010

எங்கே போனாய் தோழி


எங்கே போனாய் தோழி


நீ யாரோ
நான் யாரோ


பிறந்ததும், வளர்ந்ததும்
வேறு, வேறு இடம்

இணைந்தததோ
இணையதளத்திடம்

எதார்த்தமாக எங்கு அமர்ந்தாலும்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்
ஒட்டிக் கொள்வது போல்
பழகியதும் சிறகு விரித்தது நம் நட்பு


எனக்காதரவு நீயானாய்
உனக்காதரவு நானானேன்

தொலைவில் நாமிருந்தாலும்
தொடும் தூரத்தில்தான் நம் நினைவுகள்

வலிநேரிடும் போதெல்லாம்
ஓடி வருவாய் என்னிடம்
மருத்துவன் நான் என்று...

மகிழ்வோடு விளையாடும்போது
ஒரு குழந்தையாகவே மாறிவிடுவாய் 
நட்பெனும் மயிலிறகு தீண்டும் போது...

எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ தோழமையின் பூந் தோப்பு என்று...

எனக்கு மட்டும்தான் புரியும்
உன் நேசத்தின் மொழி  பெயர்ப்பு...

ஏதோ காரணம்
விலகி விட்டாய்
இல்லை
விளையாடி பார்க்கிறாய்...

கண்ணாமூச்சு ஆட்டடமாய் ஆனது வாழ்க்கை
உன் விரல் பிடித்து சென்ற வழி எல்லாம் கேட்கிறது
எங்கே  உன் நிழல் என்று...

நிலை மாறும் உலகத்தில்
தடுமாறும் நிமிடத்தில்
எங்கே நீ இருந்தாலும்

உனக்கென்று ஒன்று இல்லை என்று
ஓய்ந்து விடும் காலத்தில்
உடைந்து விடாதே...
நட்பெனும் நம் வீட்டு
கதவு திறந்து இருக்கு மறந்துவிடாதே...


எப்பொழுதும்...
இணையதளம் வரும்போது எல்லாம்
இணை பிரிவதில்லை
இளையுதிர் காலமாய்
இன்னும் நிகழ்கிறது
நமக்குள் முட்டிக் கொண்டு
நாம் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்த
அந்த முதல் வார்த்தைகள்...

உன் பெயர் உள்ளவரிடம் எல்லாம்
உரிமையோடு உரையாடுகிறேன்
அது நீயாக இருக்கலாமோ என்று...

நீ..

எப்படி

தோழி...

அப்படிதானா
என்னையும் தேடுகிறாய்



வித்யாசன்


பாடகன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக