சனி, 9 அக்டோபர், 2010

கேள்விக்குறி ?

உன்னை பற்றி என்ன எழுத ?
எழுத்து பிழையாக நான் ...

எதனை ஒப்பிட்டுச் சொல்ல ?
எல்லாமே உனக்கு எஞ்சியதுதான்...

உன்னை குறித்து என்ன சொல்லிவிட முடியும் ?
வார்த்தைகளை தேடி அலையும் என்னால்...

உனக்குகென்று எதை கொடுப்பேன் ?
என்னை தவிர எனதென்று ஏதுமில்லா உலகத்தில்...

எப்போது படித்து முடிப்பேன் ?
ஒவ்வொரு நிமிடமும் ஒரு புத்தகமாய் நீ...

உன் கனவுகளை எப்படி அலங்கரிப்பேன் ?
என் தூக்கத்தை தொலைத்து விழிப்பதால்...

உனது அழகை எங்கே வர்ணிப்பது ?
உன் முன் ஊமையாகும் என் இதழ்களால்...

உன் அசைவுகளை என்னென்று ரசிப்பது ?
அடிக்கொருமுறை நீ ஓவியமாக மாறும் நிமிடத்தில்...

உன் உலகத்தில் எந்த இடத்தில் நான் இருப்பது ?
என் உலகமே நீயான பின்பு ?
 
பாடகன்

1 கருத்து: