நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...
உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்...
நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...
உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொலுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...
உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...
உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...
நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...
உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...
உன்னுடைய....
கூந்தல் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...
நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன் !!
-MVIDHYASAN@GMAIL.COM-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக