திங்கள், 18 ஜூலை, 2011

வெட்கம்




விழிகள் தலை சாய்த்துக் கொண்டது
இதழ்கள் மெல்ல சிவக்க ஆரம்பித்தது
இருதயம்  அதிர துடித்தது...

ஆசைக்கு  கைகள் நீண்டன
இமைகளின் குடைகள் சுருங்கின
உணர்வுகள் நில நடுக்கம் கண்டன...


பெண்மை மென்மையை உரசியது
மெளனம் எச்சிலை தேடியது
தேகம் தேய்பிறையாய் ஆனது...

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை  சொன்னது
வார்த்தைகளுக்குள் வைத்தியம் நடந்தேறியது
பருவத்தின் திமிர் பதம் பார்த்தது...


அசையும் வளைவுகளில் ஆயிரம் அதிசயம்
எந்த விழியாலும் படிக்க இயலாத புத்தகம்
இது யாருக்கும் புரியாது நிகழ்ந்த  தருணம்...

நீ...
எனை பார்த்து வெட்கப்பட்ட நிமிடம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக