பெண்
யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...
ஆண்
உன் புன்னகைக்கு பின் கண்ணீர் கண்டு
என் நெஞ்சம் ஆனது முள்ளாய் இன்று....
பெண்
எது வரை நம் இருவரின் பயணமோ
உயிர் கரையினில் நம் நினைவுகள் கலந்திடுமோ
ஆண்
இமை விலகலில் தேடல் இன்னும் நீளுமோ
இருவரும் இனி ஒருவர் என்றாகுமோ....
பெண்
தவழ்ந்திடும் குழந்தையாய் என் மனம்
நீ தாவி அணைத்திட உயரமாகும் என் கரம்
நான்
என் நினைவினில் பூத்திட்ட புது சுகம்
நீ எனதிறுதிவரை வரும் நிழற் படம்
பெண்
காணும் கனவுக்குள் நீந்திடும் கானல் ஓடம்
கன்னத்தில் உதிரும் துளிகளும் பாரமாகும்
ஆண்
மறந்திடு கவலையை விட்டு பறந்திடு நீயும்
நீ இளைப்பாற என் தோளே மரக்கிளையாகும்
பெண்
இதுவரை எனக்கென்று ஏதுமில்லை நிரந்தரம்
இனி பயணங்கள் முழுவதும் உன் விரல் துணை வரும்
ஆண்
தயக்கங்கள் விடுத்திடு என்னிடம்
நடப்பது யாவும் இனி நம் வசம் !!
பெண்
யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...
ஆண்
நீயும் நான்
நானும் நீ
துளி பேதமில்லை நம்மில் இனி !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக