புதன், 16 மார்ச், 2011

அந்த நிமிடத்தில் ஜப்பான்



விதையிலிருந்து ஒரு  அரும்பு புதுப்பித்த மணித் துளி
பட்டாம் பூச்சி ஒன்று தனது சிறகை திருப்பி பார்த்த வினாடி
கருவறையிலிருந்து குழந்தையின் தலை மட்டும் வெளிவந்த  தருணம்
காதல், ஆயிரம் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வேளை
காமம் கண்ணாடியாய் ஒட்டி பார்த்திருந்த பூஞ்சோலை
அன்பு வருடி வரவேற்றுக் கொண்டிருந்த கணம்

உறவுகளின் வேர்கள் ஆழப்படும் நேரம்
ஏதும் அறியாது தூக்கம் களவாடிக் கொண்டிருந்த நாளிகை
ஓர்அக்கிரமம் வக்ரமத்துடன் மீசையை முறுக்கிய கோலம்
முதுமை பழமையை ரசித்து வர்ணம் தீட்டிய ஜாலம்
இரும்பு பெட்டிக்குள் கணக்கு பார்த்த பணம்
விஞ்ஞானியின் புலம்பல் ஆரம்பம்பம்

அடுத்த தலைமுறைக்கு இணைத்து வைத்த செல்வம்
அறிவியலின் உச்ச வளர்ச்சியிட்ட அரை கூவல்
அணு உலைகளுக்குள் நடந்தேரிய ஆராய்ச்சிகள்
மனித முயற்சியின் முதுகெலும்பான இனத்தவரின் உரத்த சிந்தனைகள்

யாருக்கு தெரியும் ?

அடுத்த கணத்தில் அரங்கேரப்போகும் பயங்கரம் ?


ஒரு சில நிமிடத்தில்....
 நிலநடுக்கம்...

கடலுக்கு நிகழ்ந்த குழப்பத்தில் அலைகள் வாய் பிளக்க
கரை தாண்டி விரைந்தோடி வந்தது தண்ணீர் பெருக்கம்
அபாய குரல் .. அடி நாக்கின் தூரம் தாண்டவில்லை
இமைகளில் இருந்து கண்ணீர் முழுதாக இறங்கவில்லை
நினைவுகள் ஒரு முறை நினைக்க இடமில்லை

ஆழிபேரலை அள்ளிச் சென்றது எல்லையில்லா உயிரை...

பாதைகள் கற்காலமாய் ஆனது
வீடுகள் தீப்பெட்டி குச்சியாய் சிதறியது
வாகனங்கள் காகித கப்பலாய் மிதந்தது
எல்லாம் பிரவித்த மனிதனின் உடல் எங்கே புதைந்தது ?


மீண்டும் மீண்டெலுவோம் என்று ஊன்றுகோலாய் நின்றாலும்
மாண்டுபோன மனங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல ?
அழுவதற்கு கூட ஆள் இல்லாத இடத்தில்
அணு உலைகள் உறுமுகிறதாம் இனி யாரை கொல்ல ?


கடல் எல்லைகளை கைப்பற்றியது குற்றமா ?
அறிவியல் அனைத்தையும் வெள்ளும் எனும் ஆனவமா ?
அழிவு என்பது நிச்சயம் உண்டு என்ற அலட்சியமா ?
எதுவாக, யாராக, எப்படிபட்ட கேள்வியாக இருந்தால் என்ன ?
அங்கு இருந்தவருக்கு மட்டுமே தெரியும் அந்த நிமிடத்தில் ஜப்பான் !!

vidhyasan@gmail.com






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக