செவ்வாய், 21 ஜூன், 2011

அம்மா - சும்மா

எத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா
 

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என்தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன 

காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக