செவ்வாய், 21 ஜூன், 2011

புது புது

விலையில்லா தருணம்
உன்னோடு உரையாடும் நிமிடம்

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் பாதையில்

தனிமையில் களவாடல்
உன் நிமிடங்களோடு நகர்தலில்

மெளனங்களிடம் மன்னிப்பு
உன் இதழ் விரிப்பின் காத்திருப்பில்

உலகத்தின் வனப்பு
உன் விரல் கோர்கையின் நிமிடத்தில்

காயத்தில் தேன்
என் கண்ணீர் கடலில் துடுப்பாய் உன் விரல்

சோகத்தில் தாலாட்டு
சாய்ந்து கொண்டது என் நெஞ்சம் உன் தோளில்

மரணத்தின் முன்னோட்டம்
துளி தருணத்தில் உள்வாங்கினேன் உன் பிரிவில்

சருகாய் இதயம்
உன் முகவரியை தேடிபோதெல்லாம்


அலை அலையாய் சுகம்
நீ அருகினில் இருக்கும்போது வரும்


மழை மழையாய் பொழியும்
நீ கணம் கோபித்தாலும் என் விழியில் நிகழும்

மலை மலையாய் மனம்
உன் உறவு உதயமானதால் வளரும்

பிழை மட்டுமே கவிதையாய்
நீ... இதழ் கடித்து படிப்பது என்றால் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக