இரவு
பலருக்கு
தூக்கமாகும்!
இரவு
சிலருக்கு
கனவாகும்!
இரவு
பல நேரம்
படுக்கையாகும்!
இரவு
சில நேரம்
தொலையும் இடமாகும்!
இரவு
இனிப்பு
மழையாகும்!
இரவு
கண்ணீர்
மலையாகும்!
இரவு
நிலா
பந்தலாகும்!
இரவு
வின்மீன்
மாநாடாகும்!
இரவு
வியர்வை
துளியாகும்!
இரவு
கசங்கிய
போர்வையாகும்!
இரவு
தைக்கும்
உறவாகும்!
இரவு
நைய்ய புடைக்கும்
நினைவாகும்!
இரவு
முகம் காட்டும்
கண்ணாடியாகும்!
இரவு
யுகம் கடக்கும்
நிமிடமாகும்!
இரவு
மிதக்கும்
கப்பலாகும்!
இரவு
கலையும்
மேகமாகும்!
இரவு
வெளிச்சத்தின்
அஸ்திவாரமாகும்!
இரவு
இருட்டின்
அஸ்தியாகும்!
இரவு
நிழல்தரும்
குடையாகும்!
இரவு
நிர்வாண
உடையாகும்!
இரவு
கருப்பு
கடலாகும்!
இரவு
சிவப்பு
விழிகளாகும்!
இரவு
அழகிய
பாடமாகும்!
இரவு
இணைக்கும்
கூடமாகும்!
இரவு
நீண்ட
தேடலாகும்!
இரவு
மீளாத
ஊடலாகும்!
இரவு
கிளையில்லா
மரமாகும்!
இரவு
விலையில்லா
வரமாகும்!
இரவு
மர்மங்களின்
முடிச்சு!
இரவு
காயங்களின்
மருந்து!
இரவு
பகலுக்கு
முதுகு!
இரவு
காமத்திற்கு
மதகு!
இரவு
பிறப்புக்கு
விருந்து!
இரவு
காதலுக்கு
விந்து!
ஆனால்!
தீராவுக்கும் ‡ மீராவுக்கும்
அப்படி அல்ல!
ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!
நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!
கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!
வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!
தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!
இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!
தீரா!
மீரா நினைவில்
கசிந்ததாய்!
உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!
இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!
அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!
இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!
தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!
தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!
உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!
மீரா!
தீரா தீண்டலில்
துவண்டிருந்தாள்!
இருவரின்
விழிகளும்
இமை உறைக்குள்
புக வில்லை!
மெளன இரவு
கசிய கசிய
மயக்கங்கள் தீரவில்லை!
மீரா!
விழிப்பிடியில்
தீரா!
தீரா!
விரல் பிடியில்
மீரா!
உறக்கம்
உளர ஆரம்பித்தது
இருவரின் பிடியில்!
வானம்
கருப்பு ஆடை உரித்து
வெளுக்க ஆரம்பித்தது!
தீரா!
மீரா!
வெளுத்த விழிகள்
சிவத்தது!
அதிகாலை
விடியலானது
தூக்கத்தையே
அணைக்கும்!
தீரா!
மீரா!
விடியலானது
ஏக்கத்தையே
அணைத்தது!
(தொடரும்....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக