ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 8

கண்ணாடியின்
பார்வை
ரச விழி உள்ளவரை!

வானத்தின்
பார்வை
பூமி உள்ளவரை!


பூக்களின்
பார்வை
வாசம் உள்ளவரை!

சமுத்திரத்தின்
பார்வை
அலை உள்ளவரை!

ஸ்வரங்களின்
பார்வை
விரல் மீட்டும்வரை!

ஆணின்
பார்வை
பெண் உள்ளவரை!


பெண்ணின்
பார்வை
ஆண் உள்ளவரை!

தீராவின்
பார்வை
மீராவின் உள்ளம்வரை!


மீராவின்
பார்வை
தீராவின் எல்லை வரை!


புவி நடுங்கினால்
பூகம்பம்!

மலை நடுங்கினால்
எரிமலை!

வானம் நடுங்கினால்
மழை!

வாள் நடுங்கினால்
பலி!

சூரியன் நடுங்கினால்
தீ!

நிலா நடுங்கினால்
இருள்!

இதயம் நடுங்கினால்
காதல்!

நடுங்கியது
தீரா!
மீரா!
இதயம்!

இரவுகளை விற்றுவிட்ட
சந்தோசத்தில் அதிகாலை
சலசலத்தது!

தூக்கத்தை தூக்கிலிட்ட
கர்வத்தில் சூரியன்
மினுமினுத்தது!

அன்றைய
பகல் பொழுது
முந்தைய இரவு முதல்
நகர மறுத்தது!

உச்சி வேளை
உணர்வுகளை
பிய்த்து எறிந்து கொண்டிருந்தது!

தீரா
காட்டு தீயானான்!

மீரா
கற்றாளை முள் ஆனாள்!

மாலைக்காக
காத்திருந்தது
இரு மனமும்!

வழக்கம்போல்
சூரியன் சுருங்க ஆரம்பித்தது!

மயக்கம்தரும்
மாலை அரும்புவிட்டது!

தீராவிற்கு தெரியாத என்ன ?
பாதங்கள்
ஆற்றங்கரையில்!


நதிகள்
கரையில்
தலை துவட்டி கொண்டிருந்தது!

மீரா
நினைவு
தீராவை துவட்டிக் கொண்டிருந்தது!


புற்களின் நுனிகள்
பனித்துளிக்காக
புதுப்பித்துக் கொண்டிருந்தது!

தீரா- வின் விழிகள்
மீரா -வருகைக்காக
தடம் பதித்துக் கொண்டிருந்தது!


நிசப்தம்
நீளுகையில்
மொட்டு விரியும்
சப்தம் கூட கைத்தடலாகும்!

சப்தம் பிளிறுகையில்
சரிந்துகிடக்கும் சடல
நிசப்தம் கூட கதறிஅழும்!

நிகழ்ந்தது
கைதட்டல்களும்
அழுகையும்
தீராவுக்குள்!

நதிக்கரையில்
தீரா!
உயிர் கரையை மீட்டிக் கொண்டிருக்க!!

மறு கரையில்
மீரா!
உணர்வுகளை மூட்டிக் கொண்டிருந்தாள்!

ஒரு கல்
எப்போது சிரிக்கும்
சிலையானால்!

ஒரு மரம்
எப்போது காயப்படும்
பழமானால்!

ஒரு சொல்
எப்போது ஆழப்படும்
உண்மையானால்!

ஒரு முள்
எப்போது பேசப்படும்
பதம் பார்த்தால்!

ஒரு வாள்
எப்போது வீசப்படும்
சரித்திரமானால்!

ஒரு நெல்
எப்போது உயிராகும்
பசியாற்றினால்!

ஒரு பெண்
எப்போது பொன்னவாள்
நாணமானாள்!

மீராவுகள்
நிகழ்ந்தது!

யார் அது ?
ஆற்றங்கரையில்
ரேகை அழித்தது!

யார் அது ?
பூவுக்குள்
பூகம்பத்தை புகுத்தியது!

யார் அது?
பாலைவனத்தில்
பனி மழை பொழிந்தது!

யார் அது?
பாதரசத்தில்
பன்னீர் தெளித்தது!

யார் அது?
பாறைக்குள்
வேராய் நுழைந்தது!

யார் அது?
காற்றுக்குள் ஈரமாய்
புகுந்தது?

யார் அது?
சிறகுக்குள் சிறுத்தையை
விதைத்தது!

யார் அது?
நிலவுக்குள் கலங்கங்களை
துடைத்தது!

மீரா!
தீராவை!
யார் ? யார் ?


அனை நிரம்பினாள்
வெள்ளம்!

நீர் குதிக்குமிடம்
பள்ளம்!

மேகம் கூடினாள்
தடுக்க முடியாது
உருகுவதை!

மோகம் கூடினால்
நிறுத்த முடியாது
நோகுவதை!


மீரா!
வெள்ளமாய்!
பள்ளமாய்!
உருகினாள்!
நொந்தாள்!

யரால் ?
தடுக்க முடியும்?
உணர்ச்சிகள் உடைபடும்போது
இலக்கணம் மாற்றமடைவதை!

பெண்ணை
கட்டுப்படுத்துவது
என்பது ?

விண்னை
மட்டப்படுத்துவதற்கு
சமம்!

மீரா!

தடுத்தாள்!
உடைத்தாள்!
அதட்டினாள்!
ஆணையிட்டாள்!
அமிழ்த்தினாள்!
ஆற்றினாள்!
அழித்தாள்!
புதைத்தாள்!
மூடினாள்!
மறைத்தாள்!
தன் மனதை!!

இறுதியில்
உறுதியானாள்!

தீராவை
சந்திக்க
சிறகானாள்!

ஆற்றங்கரையில்
ஆடும் தென்றலாய்!
பாடும் குயிலாய்!
தாவும் மீனாய்!
தழுவும் நீராய்!
நுரைக்கும் மணலாய்!
சிறகு விரிக்கும்
வண்ணத்து பூச்சியாய்
வந்தடைந்தாள்!!


(தொடரும்....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக