ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

அவளும், நானும் உரையாடல் - 6

அவள்
என்ன இன்று இந்த பக்கம்

நான்
எப்போதுமே உன் பக்கம் தானே

அவள்
எதை பற்றி இன்றைய படைப்பு


நான்
உன் நகம் பற்றிய படிப்பு

அவள்
நகத்த பத்தியா ? அதுல்ல என்ன இருக்கு ?

நான்
தெரிந்ததை சொல்கிறேன் கேட்க விருப்பமா ?

அவள்
ம்ம்ம்......


நான்

வளரும் வைரம்
நீளும் கோபுரம்
கண்கள் விளையாடும் 20 சதுரங்கம்
வெட்ட வெட்ட எழும் பளிங்கு சுவர்
ரசம் பூசப்படாத கண்ணாடி
திறக்க முடியாத அழகிய பெட்டி
அசைபோடாத பற்கள்
கைப்பிடியில்லா கத்தி
விரல்களின் மூக்குத்தி
தூக்கம் ஏங்கும் தலையனை
கனவு புரளும் படுக்கை
உயிர் உள்ள பனிக்கட்டி
இருதயம் வெட்டும் மண்வெட்டி (மம்பட்டி)
உடையாத முட்டை ஓடு
அதிசய பொட்டல் காடு
ஒட்டி வைக்கப்பட்ட கதவு
தென்றல் இளைப்பாறும் இருக்கை
பேச தெரியாத குட்டி நாக்கு
கற்பனை நிறைந்த வெற்று காகிதம்
பாதம் படாத ஒற்றை படி
நிலா நின்று பார்க்கும் மொட்டை மாடி
அசையாது எரியும் தீபம்
அசையும்ஆமை கூடு
வெள்ளை நிற வழுக்கு பாறை
விரல்களின் மகுடம்
விளக்க முடியாத வரைபடம்
உனது நகம்


அவள்
எப்போது இப்படி எல்லாம் என் நகத்தை பார்த்தீங்க

நான்
நீ அடிக்கடி நகம் கடிப்பாய்
அப்போதெல்லாம் நான் அதில் பாடம் படிப்பேன்

அவள்
நல்லாதான் படிக்குறீங்க

நான்
அப்ப மதிப்பெண் என்ன ?

அவள்
இந்த மதி (போன்ற) பெண் உங்களுக்குதான்

நான்
ம்ம்ம்......

- வித்யசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக