ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

வா கள்ளனே

மழை தடுக்க மலை தூக்கி
குடையாக்கிய குழலாதவனே
மயிற்பீலி தலையில் சூடி
மயக்கமுறக் கொல்லும் மாதவனே
பின்னிடை பிடித்து தன்னிலை மறக்க
மாயம்புரியும் வாசுதேவனே
கண்ணிடையில் கன்னியரை
காதல் பெருகச்செய்திடும் கண்ணனே
மென்நீலமேக தேகமீது மீளா நேசமிகு
மோகமது தந்திடும் கோபாலனே
நின் பாதம் பற்றும் பாமரனின் பாவம் தீர்த்து
பலமருளும் பரந்தாமனே
என் பாடல் யாவிலும் பாவித்திருக்கும்
என்னில் பாதியான கிருஷ்ணனே
நல் கீதையது நாளும் விடியும் காலையது
காதினில் ஓதிட வா வா கள்ளனே ~~~



-வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக