ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தனிமையில் சிரிக்கின்றேன்
முதன் முதலாக என்னையே ரசிக்கின்றேன்;

நகம் கடித்து பழகுகின்றேன்
தனி அறையை தேடி அலைகின்றேன்;

கண்ணாடிக்கு தோழியானேன்
தாவணி சூடி பார்த்து மகிழ்கின்றேன்;

அடிக்கு ஒரு முறை களவு போகின்றேன்
பின் தொடரும் நிழலை துரத்தி விடுகின்றேன்;

வெளிச்சம் இருந்தும் இருட்டை நாடுகின்றேன்
வார்த்தைகள் இருந்தும் மெளனத்தில் உரைகின்றேன்;

அர்த்தம் தெரிந்தும் அறியாததாய் நடிக்கின்றேன்
உறக்கம் வந்தும் இமைகளை திறந்து வைக்கின்றேன்;

கடந்த நிமிடங்களிடம் எதையோ தேடுகின்றேன்
கண்ணில் பட்டால் காற்றாய் மாறிவிடுகின்றேன்;

காரணம் என்னவென்று
நீ
புரிந்து கொள்வாயடா...

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக