ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தீண்டிடும் உன் நினைவினை
தாண்டிட மனம் விரும்பவில்லை;
வாடிடும் பொழுதினிலே
தேடிடுதே மனம் உன் தோளினையே;
எது வரை என் பயணமோ
அது வரை உன் நிழல் வருமோ...

தேய்ந்திடும் வாழ்க்கையில்
தேடிடா வந்த தேவதையே;
தேவை நீ என்று அழைக்கையில்
வெயில் கானலாய் ஆனதே;
இடம் விட்டு போகலாம்
இதயம் விட கூடுமோ;
உடல் விட்டு போகலாம்
தேடல் விட்டு போகுமோ....

காற்றடித்து பூக்கள்
காயமடைவதில்லை;
சருகுமிதித்து பூமி
கோபம் கொள்வதில்லை;
நீ பிரிந்து நான்
வாழ்ந்தும் ஏதுமில்லை;
நாமிருந்த நாட்களுக்கு
ஈடு ஏதுமில்லை...

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக