புதன், 29 டிசம்பர், 2010

என்னை தவிர

மெலிந்துபோன இடையில் நீ
வைத்திருப்பது குடமா?
இல்லையது அழகிய மகுடமா !

உன் வளை கரத்தால்
வளைத்து பிடித்திருப்பதால்
மண்ணும் விலையில்லா அழகானது !

நீ வைத்திருப்பது வெற்றுகுடமா?
பின்பு ஏன் காற்று காத்திருக்கிறது
தன்னை நிரப்பிக் கொண்டு குளிர!

பல்லவன் காணவில்லை
இதை  பார்த்திருந்தால் சிலை வடிக்க
புவியில் கல்லில்லை என்று புலம்பியிருப்பான்!

புத்தரும் புதைந்து விட்டார் இல்லையேல்
புது ஓவியமென்று உன் மீது ஆசை என்று
ஒப்புக் கொண்டிருப்பார் !

ரவிவர்மன் ரசித்திருந்தால் மட்டும் என்ன?
உனை வரைய வண்ணமில்லை என்று
விரலை ஒடித்தருப்பான்!

பாரதியும் இதை  கண்டிருந்தால்
பாட்டில் வடிக்க இயலாத
பாவை என்று ஏட்டில் எழுதி வைத்திருப்பான்!

என்னை தவிர
என்னவளை
யாரால் - இப்படி
கவியில் பூட்டி வைக்க முடியும்!!

வித்யாசன்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாண்டிய போது

கண்ணீரின் உலகம்;
வலியின் வசிப்பிடம்

துயரம் தூங்கும் விடுதி;
மரணம் விழுங்கும் ஆலயம்


அலரல் சப்தத்திற்கு நடுவே
அவரவர் இருப்பிடம்

வேதனையை தீர்க்க,
தீர்த்தம் தரப்படுகிறது மருந்தாக

 ரணம் ஆற, பல வண்ணத்தில்
வாயில் நுழைகிறது மாத்திரையாக

பெரும் சோக கதை;
நீளும் உடல் பரிசோதனை

நிஜமான வெள்ளை தேவதைகள்
இங்கே புன்னகையுடன் வலம்

அவ்வப்போது மறு பிறவி
அறுவை சிகிச்சை அறையிலிருந்து

மருத்துவர் பிரம்மாவாக;
மரண தீர்ப்பை ஒத்தி வைத்து எழுதும்போது

வீரனும், அறிஞனும், ஏழையும், யாராயினும்
ஒன்றுதானாம் இதற்கு முன் (நோய்)

எது எதுவோ பெரிது என்று
எண்ணிய என் மனதின்று;
இனி யாரும் - மறுமுறை
இங்கே வராதிருப்பதே சிறந்ததென்று;

உள்ளம் உணர்ந்தது
மருத்துவமனையை தாண்டிய போது !!



செவ்வாய், 21 டிசம்பர், 2010

தனிமை



நமக்கு நம்மை காட்டும்
ரசமில்லா கண்ணாடி

நினைவுகளை படம் பிடிக்கும்
ஒலி,ஒளி யில்லா ஊடகம்

மெளனத்தின் இதழ்கள் படிக்கும்
அர்த்தமுள்ள புத்தகம்

தோய்ந்து போன கனவுகளை
உலர்த்தி ரசிக்வைக்கும் தருணம்

நிமிடங்களின் இடுக்கில் அமர்ந்திருக்கும்
இடைவெளியை மீட்டும் புது ஸ்வரம்

சுதந்திரத்தின் சுகந்தத்தை
கற்றுத் தரும் கரு மந்திரம்

தொலைவில் போனதை எல்லாம்
தொடும் தூரத்தில் கொண்டு வரும் வரம்

ஒரு நிமிடம் தனித்து பார்
மரணத்தின் பிந்தைய ரகசியம் சொல்லும்
தனிமை !!
அன்பு மலர்

திங்கள், 20 டிசம்பர், 2010

பின்னால்

ஒரு சிலைக்கு பின்னால்
அடி வாங்கி அலங்கரித்த உளி மறைந்திருக்கிறது


ஒரு ஓவியத்திற்கு பின்னால்
பல வண்ணங்களை உடுத்திய தூரிகை ஒலிந்திருக்கிறது


ஒரு பட்டு சேலைக்கு பின்னால்
பல்லாயிர பட்டு பூச்சிகளின் உயிர் படிந்திருக்கிறது


ஒரு மலருக்கு பின்னால்
உயிர் கொடுத்த வேர்கள் புதைந்திருக்கிறது


ஒரு ஒளிக்கு பின்னால்
இருளின் குவியல்கள் குவிந்து கிடக்கிறது


ஒரு மழைத்துளிக்கு பின்னால்
காற்றின் கால்தடங்கள் கலைந்திருக்கிறது


ஒரு நிமிடத்திற்கு பின்னால்
பல்லாயிர கணக்கான காலங்கள் உரைந்து கிடக்கிறது


ஒரு வெற்றிக்கு பின்னால்
உயிரை புரட்டி பார்த்த தோழ்விகள் பதுங்கியிருக்கிறது


ஒரு ஒலிக்கு பின்னால்
உருமில்லா இசை பின்னல்கள் பினைந்துகிடக்கிறது


ஒரு துன்பத்திற்கு பின்னால்
துளிகளின் வடிவில் கண்ணீர் கடல் கவிழ்ந்திருக்கிறது


ஒரு கவிதைக்கு பின்னால்
ஓராயிரம் கற்பனைகள் வடிகட்டியிருக்கிறது


ஒரு முதுமைக்கு பின்னால்
இளமையின் ரகசியங்கள் தொலைந்திருக்கிறது


ஒரு திறமைக்கு பின்னால்
இடைவிடாத முயற்சியின் சுவர் எழுந்திருக்கிறது


உலகில் உள்ள ஒவ்வொன்றிற்கு பின்னாலும்
கதை எழுத காத்திருக்கிறது


இயற்கையின் அதிசயங்கள் !!



 

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011

யாதும் சமமென்று யாவரும் கூடுவோம் 1
சாதி உண்டு - ஆண்,பெண் என்ற 2
அன்பின் மடியில் மலரும் நம் மதங்கள் 3
வெற்றியை சுமந்து பயணிக்கும் திசைகள் 4
அதிசியங்கள் நிறைந்து வழியும் சக்தியான பூதங்கள் 5
அனைத்தையும் ஆளும் அறிவானது 6
வானவில் நம் வாழ்க்கையில் குலைக்கட்டும் வர்ணங்கள் 7
தோழ்விகள் தொடர்ந்தாலும் சோர்வடையாது லட்சியம் 8
நம் பெயர் சொல்லி சுழலட்டும் கோள்கள் 9
நம்பிக்கையின் மூலனதனமாய் நம் விரல்கள் 10
புது ஒளி கொண்டு வழி ஒன்று பிறக்கிறது 2011

சனி, 18 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011




புழுதி படிந்த நமது கலாச்சாரம் - இந்த

புத்தாண்டில் புத்தாடை அணியட்டும்;

பழுதடைந்த நமது பண்பாடு - இன்றோடு

பாரதத்தில் புதையுண்டு அழியட்டும் !



சுருங்கி கிடக்கும் நமது உள்ளம் - இனி

பரந்து இருக்கும் வானம் ஆகட்டும்;

கிழிந்துபோன பழைய தேதியாக -  நம்மில்

சாதிகள்  ஒழிந்து போகட்டும் !



பதுக்கி வைத்திருக்கும் பணங்களை எல்லாம்

ஏழைக்கு பகிர்தளிக்க முடிவெடுப்போம்;

ஒதுக்கி வைக்கும் இன, மதங்களை யாவும்

குப்பையில் பெருக்கி தள்ள தோள்கொடுப்போம் !





அறிவியல் வளர்ச்சி, அழிவுக்கு வழி விடுவதை

புது முயற்சிகள் மூலம் முறியடிப்போம்;

அமுதும் ஏங்கும் தமிழை இன்னும்

அதிகம் கவிதை எழுதி அழகாய் விதைப்போம் !



வானம் முட்டி உடையும் அளவு

மனித நேயம் எட்டி வளரட்டும்;

கானக் குயில்களின் இன்னிசை மட்டும்

நம் காதுகளை துளைக்கட்டும் !





கடந்த காலம் துன்பங்கள் யாவும்

இறந்த காலம்  ஆகட்டும்;

இனி கடக்கப்போகும் ஒவ்வொரு கணமும்

நமக்குள் புது சக்திகள் பிறக்கட்டும் !



இருட்டு எனும் அழுக்கு வேட்டி - (இன்றோடு)

வானம் விட்டு கிழியட்டும்;

வெளுப்பு எனும் ஆடை கட்டி  - (புதிய)

கிழக்கு முட்டி முளைக்கட்டும் !





                                                                              வித்யாசன்........

சனி, 11 டிசம்பர், 2010

மழை துளி

மேகம் கருப்பு கொடி ஏற்றி வடிக்கிறது கண்ணீர் துளி 
தற்கொலை செய்து கொள்ளும் அழகிய விழி

பூமி எனும் எழுத்தில் வானம் வைக்கிறது புள்ளி
எல்லோரையும் குழந்தையாக மாற்றும் பள்ளி
உருகி வடிகிறது வின்னிலிருந்து புது வெள்ளி
பேதம் என்று எவரையும் பார்பதில்லை தள்ளி
வானம் உடைந்து குதிக்கிறது துள்ளி
விழுந்ததும் மறைந்திடும் கள்ளி

இனிக்கும் நெல்லி
சொட்டுகிறது (தெழி)
மழை துளி !!