புதன், 20 அக்டோபர், 2010

அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)


அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்

உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...அவள்

என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது
அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது

இதழ்.....

அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !


புன்னகைத்த பாசி மணி மாலை

சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ?
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!

நன்றி