செவ்வாய், 21 டிசம்பர், 2010

தனிமைநமக்கு நம்மை காட்டும்
ரசமில்லா கண்ணாடி

நினைவுகளை படம் பிடிக்கும்
ஒலி,ஒளி யில்லா ஊடகம்

மெளனத்தின் இதழ்கள் படிக்கும்
அர்த்தமுள்ள புத்தகம்

தோய்ந்து போன கனவுகளை
உலர்த்தி ரசிக்வைக்கும் தருணம்

நிமிடங்களின் இடுக்கில் அமர்ந்திருக்கும்
இடைவெளியை மீட்டும் புது ஸ்வரம்

சுதந்திரத்தின் சுகந்தத்தை
கற்றுத் தரும் கரு மந்திரம்

தொலைவில் போனதை எல்லாம்
தொடும் தூரத்தில் கொண்டு வரும் வரம்

ஒரு நிமிடம் தனித்து பார்
மரணத்தின் பிந்தைய ரகசியம் சொல்லும்
தனிமை !!
அன்பு மலர்