செவ்வாய், 10 மே, 2011

சீ...சீ... படுக்கை மொத்தம்

திடுக்கென்று ஒரு சப்தம் 
வெடுக்கென்று பூத்தது பயம்
விசுக்கென்று வழிந்தது வியர்வை...

பொசுக்கென்று நுழைந்தது பார்வை 
பிசுபிசுக்கச் செய்தது இதய வேரை 
கசக்கி புழிந்தது உன் வருகை...

எது எது காண்பேனோ
அது அது நீயானாய்
விடு விடு என்றபோதும் ஏனோ விதையானாய்...

மது மது உன் இதழ்
எடு எடு என்றது என் விழி 
ம்ஹூம் , ம்ஹூம் என்று தடுத்தது உன் விரல்...

சல சல என காற்று
கல கல என கை வளை பாட்டு
விழ விழ எழுந்தது மோக கீற்று...

மூடி மூடி மறைத்தது உன் முந்தானை
மாறி மாறி பொழிந்தது தேன் மழை
இன்னும் இருக்கிறது அந்த கலை...

மள மள என சரிந்தது உயிர் கூடு 
எழு எழு என சிரித்தது உன் தோடு 
அழ அழ வைத்தது அந்தரங்கத்தோடு...

திடுக்கென்று ஒரு சப்தம் 
படக்கென்று பிரிந்தது இமை முற்றும்
சீ...சீ... இது கனவென்றது படுக்கை மொத்தம் !!

mvidhyasan@gmail.com

வா வா

ஓர் அழகிய மாலை
அவள் நினைவு சுமந்த வேளை
இதை விட சுகம் இந்த உலகில் இல்லை...

வான் நிலா முகம் காட்ட
அவள் நினைவு எனை வாட்ட
எப்படி அவளிடம் என் மன நிலையை காட்ட...

குளிர் தென்றல் இசைக்கிறது
விழி இரண்டில் உயிர் கசிகிறது
சதா என் உள் மூச்சும் என் பெயரையே உச்சரிக்கிறது...

இரவு தொட்டிலில் நான் குழந்தையாக
உன் இதழ் கட்டிலில் நான் புது உறவாக
நீளட்டும் இன்னும் நிமிடங்கள் தூரமாக...

மேகம் ஆனது துளி ஈரம்
மோகம் கொண்டது மனம் முழுதும்
நீ என் அருகில் இல்லை தீராத பாரம்...

உடைந்து போகட்டும் இந்த பூமி
கீழே விழுந்து நொருங்கட்டும் வானம்
வா வா என்னோடு நாம் செல்வோம் புது உலகம் !!


mvidhyasan@gmail.com

ஆஹா...


மின்னல் நரம்பில்
வானம் மீட்டியது ஓசை
மேகம் கொட்டியது இசை மழை...

ஜன்னல் கதவுகள் தட்ட
தொட்டதும் உயிர்விட்டது
பூக்களின் இதழ்கள்....

நடுநிசி நேரம்
நாய்களின் பயங்கர ஓலம்
தனியாக நானும் -  நிலாவும்...

ரகசிய உறவு
அழகிய பரிமாற்றம்
காதல் இனிப்பானது தேன்...

மெழுகுவர்த்தியும்/வெளிச்சமும்
கும்மிருட்டு கதை சொல்லியது
என் நிழல் எனக்குள்...

கசங்கிய காகிதம் கைகளில்
விரித்து விழிகள் ருச்சித்தது
என்னைபோல் யவனோ எழுதிய காதல் கவிதையை...

சொட்டும் மழைத்துளி
தட்டி விளையாடும் உள்ளங்கை
பட்டதும் நதியானது - ரேகையில்...

முற்றும் சுற்றும் பயணம்
இடைவிடாது துடிக்கும் இதயம் நிற்கும்
கண்ணீர் மற்றவருக்கு
ஆஹா...
இளைபாறுதல் இறந்தவனுக்கு !!