புதன், 8 ஜூன், 2011

எல்லாம் - நீயே

பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்