செவ்வாய், 30 நவம்பர், 2010

அவளும்-நானும் உரையாடல்- 4

அவள்
என்ன வெகு நாட்களாக காணவில்லை

நான்
கரை கடந்து கரைந்து கொண்டிருந்தேன் உன் நினைவில்

அவள்
        ம்ஹீம்.....

நான்
நீ என்ன செய்தாய்

அவள்
ரசிப்பவர் எப்போது வருவார் என்று உள்ளங்கை ரேகையில் தேடிக் கொண்டிருந்தேன்...

நான்
ம்ம்.....

அவள்
இன்று என்ன ?

நான்
என்னை தேடிக் கொண்டிருந்த உனதுள்ளங்கை பற்றி

அவள்
ம்ம்ம்.... சொல்லுங்க

நான்
நான் மட்டும் நடந்து செல்லும் சாலை
மீன்கள் நீந்த துடிக்கும் நதி
இலைகள் இல்லாத கிளை
மின்னி மறையாத மின்னல்
அழியாத அழகிய கோலம்
இசை மீட்டும் தந்தி
பூக்கள் கட்டிக் கொள்ள ஏங்கும் நார்
வண்ணத்து பூச்சி பொறமை கொள்ளும் நூலிழை
இளவம் பஞ்சு இளையாறும் படுக்கை
காற்று வந்தமரும் இருக்கை
விதையில்லா வேர்
விழிகள் விளையாடும் சதுரங்கம்
சிலந்தி பூச்சி கட்ட முடியற்சிக்கும் கூடு
முகம் காட்டாத ஒட்டி/உடைந்த கண்ணாடி
குறுக்கு, நெடுக்காக கட்டப்பட்ட கோபுரம்
வண்ணங்கள் ரசிக்கும் ஓவியம்
வற்றாது பாயும் நீர்வீழ்ச்சி
மணல் இல்லா பாலைவனம்
சிதறி கிடக்கும் சிப்பி ஓடு
மிதந்து உறங்கும் அதிசய கோடு
இயற்கையால் பின்னப்பட்ட கயிறு
உதிராத மரப்பட்டை
மிகப் பெரிய இறகு
மேகம் உரச தவமிருக்கும் முகடு
கூட்டல், பெருக்கல், வகுத்தல் காட்டும் கணக்கேடு
ரசிக்க வைக்கும் ரகசிய கிறுக்கல்
ஒவ்வொரு தடங்களும் புதுமை
ஆயிரம் உவமைகளை ஒலித்து வைத்திருக்கிறது
உனது உள்ளங்கை!!


அவள்
       ம்ம்.........

நான்
குறைவாக சொன்னதை அறிவேன்
நிறைவாக இன்னொரு நாள் சொல்கிறேன்
இப்போது விடை பெறுகிறேன்...


அவள்
அடுத்து எப்போது ?

நான்
சந்திப்பு நடக்கும்போது !!
அன்பு மலர்

Mvidhyasan@gmail.com.................