செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நமக்கான உரையாடல்


உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீதுநம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!