செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தனி உலகம் படைப்பேன்

எனக்கென ஒரு தனி உலகம் படைப்பேன் - அங்கே
தடையேதுமின்றி ஏழை தோள்பிடித்து நடப்பேன்
படபடக்கும் பட்டாம் பூச்சியாய் பறப்பேன்
பேதமை பாராது யாவிலும் தேன் குடிப்பேன்
கொடுமை செய்வோரை படம்பிடிப்பேன்
பொதுக்கூடத்திலே அவர்தம் முகத்திரைக் கிழிப்பேன்
நெடு நெடு வானாய் நிமிர்ந்து சிரிப்பேன்
நேசமுற அழைப்போரது நெஞ்சத்தில் வீற்றிருப்பேன் ~~~


- வித்யாசன்

தத் தரிகிட

தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா
தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா


நம் தேசமது தேசமது எங்கே போகுது பார்
எங்கும் வேசம், எதிலும் மோசம் என்றே ஆனது கேள்
வஞ்சம் பேதம் சூட்சம் பிஞ்சு மனதில் விதைத்தது யார்
நெஞ்சம் கொந்தளித்து கேவுகிறது காமப் பந்தில் நாம் ;


அஞ்சி கெஞ்சி அடிபணிந்தது இன்னும் மாறவில்லை
பெண்ணடிமை விலங்கு மண்ணில் வேரோடு சாயவில்லை
கொன்று குவிக்கும் பேதமை கொஞ்சமும் சாகவில்லை
பசி தீர்க்க கை யேந்தும் அவலம் எங்கும் நீங்கவில்லை ;


நாடி வருவோர் நன்று செய்ய நல்லோர் கையில் நாடில்லை
கேடு புரியும் காது கேளாதவர் வேந்தராதல் நியாயமில்லை
பாசம் அறுத்தெடுக்கும் பிரசவமாகிட நேசமெங்குமில்லை
யாவும் பணம் பறிக்கும் புதை குழியாக நேர்மை எதிலுமில்லை ;


அண்டம் முழுதும் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை
நேரும் அநீதிகளைத் தட்டிக்கேட்க சட்ட ஒழுங்குமில்லை
ஏடுநிறைந்தும் ஏற்றத்தாழ்வு எள்ளவும் நின்றபாடில்லை
ஏழை அழுகை சப்தம் அவர்தம் வீட்டுக் கூரை ஏறுவதில்லை ;


மானிடர் உள்ளமெங்கும் மாற்றமது வேண்டும் உடனே
அன்பு மலிந்தால் வாழிடம் வேட்டையாடும் காடாகிடும் மனமே
நல் ஓட்டமில்லா ஓனாய் வாழ்க்கை எனில் ஒவ்வாமை மிகுந்து
நாம் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொள்ளும் காலமது கையில் ;


தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா
தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா


- வித்யாசன்

வேண்டும்

வீட்டுக்கொரு பாரதி வேண்டும்
இல்லையேல் மீட்டெடுக்க இயலாது
வெகு சீக்கிரத்தில் வீழ்ந்திடும் எங்கள் பாரத நாடு ~~~


வித்யாசன்

பேதமை நீங்குவது

நின் பரத்தை வார்த்தையால் பயனேதுமுண்டோ
தின பாரா முகத்தால் நிலை மாறுதல் ஏதுமுண்டோ
பிடி வாதத்தால் பேதமை நீங்குவதுமுண்டோ
மன பிணமாகி பிறழ்கையில் சீண்டுவோருண்டோ ~~~


- வித்யாசன்

நான்

நித்தம் வகுப்பு
நினைவே நூலகம்
நாழிகையே புத்தகம்
நிகழ்வே வாசிப்பு
வலியே ஆசான்
வாழ்வே விமர்சனம்
படைப்பே தொழில்
பாத்திரம் தமிழ்
காப்பவள் காளி
யாவுமல்ல கற்பனை
யாதுமற்று நான் ~~~


- வித்யாசன்

ஈர்ப்பு

ஆதாம்
ஏவாள்
நியூட்டன்
வித்தியாசம்
பார்வையில்
ஆயினும்
ஈர்ப்பு
கீழ் நோக்கியே~~~


- வித்யாசன்