புதன், 4 மே, 2011

முடியவில்லைநான் உனக்கு என்றேன்
நீ எனக்கு என்றாய்
இத்தோடு என் வாழ்க்கை முடிந்தது என்றேன் 
நீ... இன்னும்...
முடியவில்லை தொடரும் என்றாய்...
அன்பின் எல்லை நீ என்றேன் 
அதிசய புத்தகம் நான் என்றாய் 
என்னை முழுவதும் படித்தாயே என்றேன்
நீ... இன்னும் ...
முடியவில்லை படிக்கிறேன் என்றாய்...
நீ எனது சூரியன் என்றேன் 
நான் உனை சுழலும் பூமி என்றாய் 
முற்றிலுமாக சுழன்று விட்டேன் என்றேன் 
நீ...இன்னும்..
முடியவில்லை சுழல்கிறாய் என்கிறாய்...


நீ எனது கனவு என்றேன்
நான் உன் நிஜம் என்றாய் 
கனவு கலைந்திடுமே என்றேன் 
நீ...இன்னும்...
முடியவில்லை கனவு தொடரும் என்றாய்...
நீயே எனக்கு எல்லாம் என்றேன் 
எனனை தவிர உனக்கு ஏதும் தேவையில்லை என்றாய் 
உயிர் பிரிந்திடின் உனை விலகிடுவேனே என்றேன் 
நீ...இன்னும்...
முடியவில்லை நமக்கான வாழ்வு  உள்ளவரை என்றாய் !!
எல்லாம் முடியவில்லை என்கிறாயே ஏன் என்றேன் 
முடியவில்லை ஏதும் நமக்குள் ஏனெனில் முடிவில்லலாதது நாம் என்றாய் உனக்கே உண்டான முடிவில்லா புன்னகையோடு!!