புதன், 29 டிசம்பர், 2010

என்னை தவிர

மெலிந்துபோன இடையில் நீ
வைத்திருப்பது குடமா?
இல்லையது அழகிய மகுடமா !

உன் வளை கரத்தால்
வளைத்து பிடித்திருப்பதால்
மண்ணும் விலையில்லா அழகானது !

நீ வைத்திருப்பது வெற்றுகுடமா?
பின்பு ஏன் காற்று காத்திருக்கிறது
தன்னை நிரப்பிக் கொண்டு குளிர!

பல்லவன் காணவில்லை
இதை  பார்த்திருந்தால் சிலை வடிக்க
புவியில் கல்லில்லை என்று புலம்பியிருப்பான்!

புத்தரும் புதைந்து விட்டார் இல்லையேல்
புது ஓவியமென்று உன் மீது ஆசை என்று
ஒப்புக் கொண்டிருப்பார் !

ரவிவர்மன் ரசித்திருந்தால் மட்டும் என்ன?
உனை வரைய வண்ணமில்லை என்று
விரலை ஒடித்தருப்பான்!

பாரதியும் இதை  கண்டிருந்தால்
பாட்டில் வடிக்க இயலாத
பாவை என்று ஏட்டில் எழுதி வைத்திருப்பான்!

என்னை தவிர
என்னவளை
யாரால் - இப்படி
கவியில் பூட்டி வைக்க முடியும்!!

வித்யாசன்