புதன், 8 செப்டம்பர், 2010

அழகு

அடிக்கடி எனை பார்த்தும்
பார்க்காதது போல் இருப்பது அழகு...

நகம் கடிக்கும் நிமிடத்திலும்
எனை நினைப்பது அழகு...

எட்டி நான் செல்லும் போதெல்லாம்
நீ குட்டி சோகம் கொள்வது அழகு...

அதி காலை விடியலில் முகம் கழுவி
கண்ணாடியில் என் முகம் காண்பது அழகு...

புத்தகத்தின் இடையே என் பெயர்
எழுதி தெரியாமலிருக்க அடித்திருப்பது அழகு...

திட்டி நான் பேசினாலும் முதலில்
விட்டு கொடுத்து நீ பேசுவது அழகு...

விட்டு விலகும் நேரத்தில்
குழந்தை போல் அடம்பிடிப்பது அழகு...

எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...

மழை கொட்டும் கணத்தில்
என் உள்ளங்கை பிடித்து நடப்பது அழகு...

பிடித்திருக்கு என்று உன்னிடம் சொல்லுகையில்
விழிகளை மடித்துக் கொண்டு வெட்கம் கொள்வாயே
அது அது தனி அழகு !!

பாடகன் ---------- Mvidhyasan@gmail.com

இன்று

மர இலைகளின் கைதட்டல்,
கொடிகளின் கைகோர்ப்பில் வரவேற்ற சாலை:
செல்போன் டவர்களாகவும்,
மின் இணைப்பு வயர்களாகவும் உருவெடுப்பு...

ஆற்றங்கரை குளிர்காற்றிலும்,
குருவிகளின் சத்தத்திலும் குதூகலித்த நிமிடங்கள்:
புழுதிகளின் முகமூடியிலும் ,
வாகன இரைச்சல்களின் பிடியிலும் நகர்கிறது...

மலை பாங்கையும்,
விளை நிலங்களையும் சுமந்த பசுமை
அடுக்குமாடி குடியிருப்பாகவும்,
தொங்கும் பூந்தொட்டிகளாகவும் புதுமை...

குளக்கரை துவையலும்,
கிணற்று குளியலும் நனைத்த சுகங்கள்:
சவர் பாத்ரூமிலும்,
வாசிங்மிசன் சலவையிலும் சுமைகளாக...

உரலில் இடித்து,
அம்மியில் அரைத்த மருந்து உணவு:
மிக்சியில் நுரைத்து,
ஃபிரிஜ்ஜில் விரைத்து விசமானது உண்மை...

பாட்டி விற்ற நெல்லிக்காயும்,
மாங்காய் வடுவும் ருசித்த வாய்:
பீசா, பிரட்டும்,
வண்ண சருகையில் லாலிபாப்புமாய்...

ஊற்று நீரும்,
மண்பானை தண்ணீரும் சுவைத்த நாக்கு:
ஃபில்ட்டர் பாட்டிலும்,
பிளாஸ்டிக் பாக்கெட்டிலும் குடிநீர் விலைக்கு...


வெயிலில் ஆடி,
மழையில் நனைந்தபடி கழிந்த காலம்:
புத்தகம் பாதி, அலைபேசி,
தெலைகாட்சி,கணினி என மீதியில் கரைகிறது...


வெண்ணிலாவும்,
வின்மீனும் ரசிக்க வேண்டுமாயின்:
பொட்டை காட்டைத் தேடியும்,
மொட்டை மாடி ஓடியும் நின்றால்தான் தெரியும்...

காதலும்,வீரமும்
மானமும், ஈகையும் கலந்த கலாச்சாரம்
துட்டுக்கு ஓட்டும்,
துடிக்கும் நிமிடத்திற்கு ஒரு காதலும்,
ஏழை மீது ஆதிக்கமும்,
உழைப்போரை ஏய்ப்பதுமாய் ஆனது...

மாறிப்போனது யாவும்
தேடி பார்க்க வேண்டியிருக்கிறது
 இன்று !! அன்பு மலர் 

---------Mvidhyasan@gmail.com

ஒருவன்

யாரென்று தெரியாது - நீ...
இணையதளம் இணைத்த இணைப்பு...
மன்னிக்கவும்...
இனிப்பு...

உனக்கும் எனக்கும் ஒரு வித்யாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...

வெற்றி தொலைவல்ல தோழியே...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...

என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...

கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..

ஆனால்...
ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
தோழியே...
உனக்காக...
உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!
மு.வித்யாசன்  நன்றி