திங்கள், 25 அக்டோபர், 2010

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்

என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---

கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்
கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்


அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன்
மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!
பாடகன் 
Mvidhyasan@gmail.com........................................................