ஞாயிறு, 17 ஜூலை, 2011

வெண்ணிலவாக


நீ இல்லாத இரவில்

உனை தேடி தனிமையில்

இமைக்காது தேடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு நிமிடமும் தேய்ந்து கொண்டு...வானத்து வெண்ணிலவாக !!

நாம் நாமானதால்

ம்... என்பது நீ
ம்கூம் என்பது நான்

காவலாக நீ
கவிகலாக நான்

நெஞ்சமாக நீ
நிழல்களாக நீ

மூச்சாக நீ
காற்றாக நான்

நிலாவக நீ
சுமக்கும் வானமாக நான்

இரவாக நீ
காணும் கனவாக நான்


உயிராக நீ
உடலாக நான்

நமக்காக நாம் என்று ஆன பின்பு
இனி...
எதற்காகவும் யவரும் நுழைய அனுமதியில்லைங
நாம் நாமானதால் !!