சனி, 30 அக்டோபர், 2010

ஏங்கவைக்கும் பொற்காலம்


வானெல்லாம் பருத்தி ஆடை
ஊரெல்லாம் பச்சை வாடை
மரக்கிளை எல்லாம் தேனடை
பூவாசம் பேசும் ஓடை...

ஒத்த வழி பாதைக்கு நான் துணை
ஒரே இடத்தில் கை வீசி நிற்குது தென்னை
யாருக்கு நெய்கிறது சேலையை ஆற்றங்கரை
வயிறு பெருத்து படுத்திருக்கு பெரும்பாறை...

புள்ளி மானாய் துள்ளி குதித்த கிணறு
புது சட்டையில் பிடித்து நழுவிய அயிர மீனு
ஆழ மர ஜடையில் ஆடிய பொழுது
அடித்த அன்னை மடியில் அழுதுகொண்டே படத்துறங்கிய இரவு...

மழை காலத்தில் தட்டான் பிடித்து தலை எடுத்த வீரன்
ஊரின் உயரமான மரத்திலேறி பெயர் எழுதிய சூரன்
ஊதிய வண்ண பலூன்னாய் வட்டமிட்ட திருவிழா
வெட்டிய ஆடு துடிக்கையில் அப்பா வேட்டியில் புதைத்த முகம்...


வீட்டு ஒழுகலில் பாத்திரத்தில் மழை வடித்த கண்ணீர்
சில்லரை சேர்த்து சிரிக்க, சிரிக்க குழுக்கி பார்த்த உண்டியல்
மின்னலில் பூத்த காளான் பறித்து செய்து சுவைத்த சமையல்
ஜன்னல் ஓரம் நின்று ரசித்த வானவில்...

பள்ளி மணி ஓசைக்காக காத்திருந்த பட்டம்
பனை ஓட்டில் வண்டி ஓட்டி பல நாடுகள் சென்று வாங்கிய பட்டம்
ரயில் பூச்சியாய் தோள் பிடித்து சாலை கடந்த சுகம்
வெயில் அப்பிய முகத்தோடு வியர்வை விழுந்த தடம்....

நுனி நாக்கு சிவக்க அப்பத்தா இடித்து தந்த வெற்றிலை பாக்கு
பனியில் குளிர் நடுங்க கருப்பட்டி கருப்பு தேனீர் இனிப்பு
ஆடு, மாடு, கோழி சத்தத்தில் அயர்ந்து தூங்கிய தூக்கம்
ஆவி வந்த கதைகள் கேட்டு பயந்து தொலைத்த தூக்கம்....

இனபேதம் அறியாது இணைந்து விளையாடிய தருணம்
ஒட்டு மொத்த ஊரும் வந்து அழுத என் உறவினரின் மரணம்
என் கிராமத்தை விட்டு வந்த பின்னும், மின்னுகிறது அந்த எண்ணம்
அவசர கதியில் அலுவலகம் புறப்பட, நகர புழுதியில் - தலைதுவட்டியது அந்த பொற்காலம்!!
அன்பு மலர் நன்றி அன்பு மலர் 

MVIDHYASAN@GMAIL.COM/////////////////////////////////////////////////////////

எப்போது வருவாய் விழியோரம்!

உன் கனவுகளில் ஊஞ்லாடுவது
என் நினைவுகளுக்கு நிலா அருகில் இருப்பதாய்..

உன் தூக்கத்தை ரசிப்பது
என் விழிகளுக்கு கவிதை படிப்பதாய்...

உன் தோள் சாய்வது
என் முகத்திற்கு பஞ்சாலையில் பதிப்பதாய்...

உன் விரல் பிடிப்பது
என் கை ரேகைகளுக்கு மருதாணி பூசியதாய்...

உன்னோடு நடப்பது
என் பாதைகளுக்கு பூந்தோட்டமாய்...

உன்னோடு இருப்பது
என் மணித்துளிகளுக்கு குளிர்காலமாய்...

நீ...
இப்போது இருப்பது தூரம்
எப்போது வருவாய் விழியோரம்!! 
அன்பு மலர்
Mvidhyasan@gmail.com./////////////////////////////////////////


வெள்ளி, 29 அக்டோபர், 2010

தென்படும் மறு பிறவியின் எல்லை

இலைகளின் மரணங்களால்
மரங்கள் மரித்து போவதில்லை ..

மேகங்கள் கலைவதால்
வானம் மெலிவதில்லை ...

உடல் உருகுவதால்
மெழுகுவர்த்தி ஒளியை குறைப்பதில்லை ...

குடை பிடிப்பதால்
மழை கொஞ்சுவதை நிறுத்துவதில்லை ...

பாதங்கள் மிதிப்பதால்
பாதைகள் பழிப்பதில்லை ...

அலை அடிப்பதால்
கரைகள் காயமாவதில்லை...

வண்டுகள் அமர்வதால்
பூக்கள் வசைபாடுவதில்லை...

மேகம் இருளை சூடுவதால்
வெண்ணிலா வெளிச்சத்தை குறைப்பதில்லை...

வானம் ஒழுகுவதால்
பூமி இட மாற்றம் செய்வதில்லை...

வீட்டை சுமப்பதால்
நத்தை ஓய்வெடுப்பதில்லை...

உயரம் என்பதால்
பறவை கூடு கட்ட மறுப்பதில்லை...

நிலை மாறும் வாழ்க்கையில்
இழப்பதற்கு உனதென்று ஏதுமில்லை...

உடைந்து ஒடுங்கிட விட
நீ ஒன்றும் கல்லறை இல்லை...

எதுவந்த போதும் எதிர்த்து நில்
மரணம் கூட உன்னை நெருங்க-தென்படும் மறு பிறவியின் எல்லை !!

Mvidhyasan@gmail.com ............................அன்பு மலர்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்


நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்


நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்


அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்


நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு


நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்


அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி


வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
சிரித்து சிதைக்கும் சோவி
வேர் விட்டிருக்கும் விதை 
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை

 நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
தனக்குத் தானே வீசும் விசிறி
புகைப்படம் எடுக்கும் கேமரா
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


 Mvidhyasan@gmail.com..........................
அன்பு மலர்
 

திங்கள், 25 அக்டோபர், 2010

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்

என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---

கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்
கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்


அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன்
மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!
பாடகன் 
Mvidhyasan@gmail.com........................................................

புதன், 20 அக்டோபர், 2010

அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)


அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்

உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...



அவள்

என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது
அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது

இதழ்.....

அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !


புன்னகைத்த பாசி மணி மாலை

சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ?
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!

நன்றி 

செவ்வாய், 19 அக்டோபர், 2010

மூடிய புத்தகமாகவே இரு

உன் இதயத்தை திறந்த புத்தகமாக வைக்காதே,
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...

உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...

உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏலனம் செய்வார்கள்...


உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...

உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...

உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...

உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...

உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...

உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம்  என்று கதவடைத்து விடுவார்கள்...

அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

அன்பு மலர்
------------- Mvidhyasan@gmail.com

கூடாதா ?

உன் விரல் படும் காகிதமாக
பிறந்திருக்க கூடாதா ? 


நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே
உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா?


நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும்
கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ? 


அதிகாலை பொழுதில் வாசலில்
அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா?

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்தி
ருக்க கூடாதா ? 

உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ? 


நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?

 
 மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?

உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ? 


நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?


உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும்
புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ? 


நின் இருதய அறையில் தங்கி செல்லும்
மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ?

பாதைகள் எல்லாம் காத்திருக்கும்
உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ?


நீ கற்பனை செய்யும் தருணத்தில்
அதன் கருப் பொருளாக கருவாகியிருக்க கூடாதா ?


என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக

 
என்னை !

 
நீ... 

 
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

ஐ லவ் யூ

திங்கள், 18 அக்டோபர், 2010

இழைக்கிறது எனது இருதயத்தை

உனது மெளனத்தின் கரை உடைகையில்
எனது வார்த்தைகளின் சருக்கள்கள்
கிளிஞ்சல்களை பொறுக்குகின்றன.... 

உனது இமைகள் கைத்தட்டி திறக்கையில்
எந்தன் காட்சிகளில் வண்ணத்து பூச்சிகளும்,
வானவில்லும் சாயம் பூசிக் கொள்கின்றன...

உனக்குள் தவறி விழுந்த வார்த்தைகள் எல்லாம்
என் தோளில் சாய்ந்தபடி கதைகள்
சொல்லிக் கொண்டிருக்கிறது தினமும் தனிமையில்...

நெடுந்தூர பாதையில்,யாருமில்லா பயணத்தில்
தொடந்து வந்து, விரல் கோர்த்து அழைத்துச்
செல்கிறது உந்தன் நிழல் தோற்றங்கள்...

உடைந்துபோன பொம்மையாய்
நானிருந்த போதெல்லாம், மறைந்திருந்து
மென்மையாய் ஒட்டவைக்கிறது உந்தன் நினைவுகள்...

இரவுகளின் துயரங்களில் இமைகள், கதவடைக்கும்
தருணங்களில், கனவுகளின் வாசல்களில்
கோலங்கள் வரைகிறது, உந்தன் கால்தடங்கள்...

மண்ணோடு உரசி பறக்கும் சருகைபோல,
என்னோடு... உள்மூச்சில் உரைந்து கிடக்கிறது
உன் உதடுகள் உதிர்த்த நேசங்கள்...

நூலிழையில் பிரிவுகள் நிகழ்கையில்
உனது இணைகையின் நினைவுகள்
கொஞ்சம், கொஞ்சமாக இழைக்கிறது எனது இருதயத்தை !!
ஐ லவ் யூ

நீ வந்த தருணத்தில்

பனித் துளிகள் எல்லாம் நிலவாய் ஆனது
எந்தன் காலையில்...
மர இலைகள் எல்லாம் இதயமாய் மாறுது
எந்தன் சாலையில்....

மழைத் துளிகள் எல்லாம் பூவாய் ஆனது
எந்தன் வானத்தில்....
ஒவ்வொரு நிமிடமும் தீவாய் மாறுது
எந்தன் கடிகாரத்தில்...


தொடரும் அலைகள் போர்வையானது
வானவில்லில் வண்ணம் கூடியது
மின்னல் நின்று புன்னகைத்தது
ஜன்னல் தீண்டி தென்றல் வியர்த்தது !

சுடும் சூரியன் சுருங்கிப் போனது
தொடும் தூரத்தில் மேகம் போகுது
வின்மீன் எல்லாம் இமைத்து பார்த்தது
தண்ணீர் எல்லாம் தவழும் குழந்தையானது!


புல்லின் நுனியும் கத்தியானது
பூமி, வானம் இடம் மாறுது
இரவு இன்று மயிலிறகானது
இருளும் கூட ஓவியமானது !

பூமி சுற்றும் திசை மாறுது
பூங்காற்றும் இசை மீட்டுது
ஓரப்பார்வை உயிர் வேரை அசைத்தது
தேக அசைவு இதயம் தேய வைத்தது !

மாலை நேரம் வெட்கம் கொண்டது
மலைகள் யாவும் பூங் கொத்தானது
கை ரேகை எல்லாம் பாதையானது
பொய் கூட உனக்கென்றதும் கவிதையானது !

இது எல்லாம் எப்படி நடந்தது
நீ வந்த தருணத்தில் நிகழ்ந்தது !
சேர்ந்திசை

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

முன்னும், பின்னும் !!


எனது கனவுகளின் உலகம் முழுக்க
ஏதேதோ கிறுக்கல்கள்....

எனது வழி எங்கும் யார் யாரோ
எழுதி வைத்த கால் தடங்கள்...

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...

என்னில் நுழைந்து பார்த்த நிகழ்வுகளில்
தொலைந்து போன என் உணர்வுகள்...

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்


எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


அன்பு மலர்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இனி எப்ப வருவாக ?

முள்ளா கிடந்த ஏ முகத்துல
அவுக மெல்ல..
நல்லா எடுத்து சுத்தஞ் செஞ்சவுக!

கல்லா கிடந்த ஏ மேனியில
அவுக வந்து...
நில்லாம கமல எறச்ச கடவுளவுக!

செல்லா காசா இருந்த ஏ உடல
அவுக நின்னு...
வில்லா வளைஞ்சு உழுதவுக!

புல்லா விளைஞ்ச ஏ உசுருல
அவுக தானே...
நெல்லா விளைய விதை விதச்சவுக!

வெடிப்பு பாதம் பட்டு
வரப்பு மடிப்பு நோகுமுன்னு...
பைய்ய அடி எடுத்து வச்சவுக!

மேகம் கருக்கும் முன்னே
தேகம் கருத்து ...
வியர்வை மழைய நில்லாம பொழிஞ்சவுக!

ஒத்த தோகை வாடிச்சுனா போதும்
கொத்து, கொத்தா கண்ணீர் விட்டவுக!

தலைப்பா கட்டிக்கிட்டு
விரப்பா நின்னுக்கிட்டு ஐய்யனார்
மீசையை முருக்கிக்கிட்டு என்ன
ஆசையா பார்த்தவுக!


எனக்கு ஏதாச்சு நோய்
வந்துச்சுன்னா...
தனக்கு வந்ததாச்சுன்னு
மருந்து குடிச்சவுக!

நா...
அரும்பு விட்டு நிற்கையில
அவுக...
இரும்பு மீசைய ஒதுக்கி விட்டவுக!

கதிரு முத்தி நிற்கையில
கஞ்சி தண்ணி குடிக்க மறந்தவுக!

குருவி கொத்தி,குருதி வருமோன்னு
இராவு,பகலா என் கூட படுத்தவுக!

கன மழை பெய்யாம
கருப்பசாமி காத்திருச்சு

கதிரு முத்தி...
கழுத்து வரைக்கும் வளந்துருச்சு

காலம் இப்ப கனிஞ்சிருச்சு
கஷ்டம் எல்லாம் தீர்ந்து போச்சு!

அன்றைக்கு வித்த ஆட்டுக்குட்டி
ஏழுமாசமான ஏ அருமை பசு கன்னுக்குட்டி
அடகு வச்ச பொஞ்சாதி தாளி
அழுது கேட்ட மூத்த பிள்ள கோழி!



இளைய பிள்ள
பார்த்து வச்ச டவுனு சொக்கா
நல்லவனுக்கு
நேந்து விட்ட மூகக்காயி மொட்ட
கடைசியில்ல
கையில்ல காது குத்த காத்திருக்கு
ஒரு பிள்ள பொட்ட
வைத்துல சுமக்குரா ஏ எஜமானி
மூக்குக்கு வளையல் மாட்ட!

எல்லாம் வாங்க
வந்ததிப்ப காலமுன்னு
கைவிரலால என கட்டி அனைச்சவுக!

சூரியன சுத்தியாச்சு
குலசாமிக்கு நேந்தாச்சு
படையல் முடிஞ்சுருச்சு
பாட்டி குலவ போட்டாச்சு!

என்ன...
அருவ கொண்டு அருக்கையில்ல
உசுர விராகட்டாம் எரிச்சவுக!

அலுங்காம, குலுங்காமா
அருத்து போட்டு
கை தூக்கி கதிரு அடிச்சு
புல்ல மட்டும் தனியா பிரிச்சு
நெல்ல மட்டும் கொண்டு போக
நினைக்கையிலே!

வந்து நின்னா விரசா
வயிறு மட்டும் யானை பெருசா
பட்டு வேட்டி, பவுசு சொக்கா
பக்கத்துல்ல இரண்டு அடியாளு மக்கா!

ஏம்...
பக்கம் வந்தா சொகுசா
பன்னையாரு அள்ளி பார்த்தான்
நைசா!

வாங்கிய
வட்டி கடனுக்கு
இந்த வருசம் இது பத்தாதுன்னு
நெல்லோட சேர்த்து
புல்லையும் வண்டியில்ல
ஏத்திக்கிட்டு போயிட்டா!

நெல்லா வீட்டுக்கு கொண்டுபோயி
எல்லாம் வாங்கலாம்முன்னு
தில்லா சொன்னவுக

இப்ப...

வானத்து நிலாவ பார்த்து
நிலத்துல மல்லாந்து படுத்திருக்காக!

வீட்டுல்ல நெல்லு வருமுன்னு
காத்திருக்க!

இப்ப புல்லு கூட இல்லாம
போராக!

ஏ ராசா


இனி எப்ப வருவாக ?


அழுகை

வியாழன், 14 அக்டோபர், 2010

சலித்து கொண்டது சாஜஹானை

நீ வருகின்ற கணத்தில்
சிறகு விரிக்கிறது எனது பாதைகள்...

நீ சிரிக்கின்ற நிமிடத்தில்
என் மணித்துளிக்குள் அடைமழை...

நீ முகம் சிவக்கும் தருணத்தில்
வர்ணம் பூசிக்கொள்கிறது என் வானம்...


நீ எனை நினைக்கும் வினாடியில்
துள்ளி குதிக்கிறது குழந்தையாய் என் மனம்..

நீ இம்மியளவு பிரிந்தாலும்
என் இமை இரண்டும் இமயமளவு துயர் கொள்கிறது...

நீ எனதருகில் இருந்தால் போதும்
என் சிறு இதயமும் சீனப் பெருஞ் சுவராய் மாறுகிறது...

நீ பொம்மையோடு விளையாடும் பொழுதெல்லாம்
யார் நிஜமென்ற உண்மை தெரிவதில்லை...

நீ உதடு ஒட்டி,நீட்டி பேசும் வேளையில்
ஒலிகள் எல்லாம் கை கட்டி கவனிப்பதுண்டு...

நீ மொட்டை மாடியில் நிற்கும் அழகில்
வட்ட நிலவு ஏக்கத்தில் தேய்வதுண்டு...

என்ன விந்தையடி ! உன் வடிவம் பார்த்து
தாஜ்மஹால் சலித்து கொண்டது சாஜஹானை !!

ஐ லவ் யூ

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உந்தன் ஓரக்கண்கள்


என் பேனாக்கள் எழுத தவறிய வார்த்தைகள்

என் நினைவுகள் எட்டி பிடிக்காத கற்பனைகள்

நான் பயணிக்காத நினைவுகளின் பாதைகள்


நான் கவனிக்காத கனவுகளின் கால்தடங்கள்

தேடலில் விட்டுச் சென்ற எனது பதிவுகள்


தேய்பிறையை திரும்ப திரும்ப ரசித்த நிமிடங்கள்

மழை துளி பட்டு விரல் நுனியில் பிறந்த தூரல்கள்


தென்றலிடம் மட்டும் உரையாடிய வார்த்தைகள்

தலையனையோடு புதைத்து கொண்ட அந்தரங்கங்கள்


அர்த்தங்களை சொல்லி தந்த அனுபவங்கள்

எத்தனையோ விதமாக எனில் நுழைந்த சுகங்கள்


எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற சோகங்கள்

இப்படி...

எல்லாம் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்க


அதனை ...


ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது

உந்தன் ஓரக்கண்கள் !!
ஐ லவ் யூ

சனி, 9 அக்டோபர், 2010

யார் நீ ?


நிலவா?
வட்டமா?

பூஜ்ஜியமா?
உலா வரும் கோளா?

நாணயத்தின் முகமா?
புல்லாங்குழ
லின் துளையா?

பூமி பந்தின் ஒரு தோற்றமா?
காலத்தை நகர்த்தும் சக்கரமா?
 

கொதித்து எரியும் சூரிய தட்டா?
சிப்பிக்குள் ஒலிந்திருக்கும் முத்தா?

உயிர் எழுத்துகளின் ஒலிக்கு உடலா?
நெற்றியில் ஒட்டிருப்பதால் பொட்டா?

புல்லில் படுத்துறங்கும் பனித் துளியா?
உடலில் ஒட்டிக் கொண்டிக்கும் மச்சமா?

தண்ணீரில் தள்ளாடும் தாமரை இலையா?
மயிலிறகின் மையத்தில் இருக்கும் அழகா?

சொட்டு சொட்டாக அவிழ்வதால் மழையா?
என் காதலியின் கன்னத்தில் உதித்த பருவா?

மணிக் கைகளில் விளையாடும் வளையலா?
அங்கும் இங்குமாய் அலைபாயும் கருவிழியா?

எழுத்து வடிவத்திற்கு உயிர் ஈட்டும் உருவமா?
தாயின் உறவை உயிர்பிக்கும் தொப்புள் கொடியா?

அகிலம்   எல்லாம்  நீயே   என்ற  கர்வத்தின்  உச்சமா?

யார் நீ ?

நானா.... ?

சிறு புள்ளி !!

நன்றி

கேள்விக்குறி ?

உன்னை பற்றி என்ன எழுத ?
எழுத்து பிழையாக நான் ...

எதனை ஒப்பிட்டுச் சொல்ல ?
எல்லாமே உனக்கு எஞ்சியதுதான்...

உன்னை குறித்து என்ன சொல்லிவிட முடியும் ?
வார்த்தைகளை தேடி அலையும் என்னால்...

உனக்குகென்று எதை கொடுப்பேன் ?
என்னை தவிர எனதென்று ஏதுமில்லா உலகத்தில்...

எப்போது படித்து முடிப்பேன் ?
ஒவ்வொரு நிமிடமும் ஒரு புத்தகமாய் நீ...

உன் கனவுகளை எப்படி அலங்கரிப்பேன் ?
என் தூக்கத்தை தொலைத்து விழிப்பதால்...

உனது அழகை எங்கே வர்ணிப்பது ?
உன் முன் ஊமையாகும் என் இதழ்களால்...

உன் அசைவுகளை என்னென்று ரசிப்பது ?
அடிக்கொருமுறை நீ ஓவியமாக மாறும் நிமிடத்தில்...

உன் உலகத்தில் எந்த இடத்தில் நான் இருப்பது ?
என் உலகமே நீயான பின்பு ?
 
பாடகன்

வெள்ளி, 8 அக்டோபர், 2010

எய்ட்ஸ் 11

எய்ட்ஸ் 10

எய்ட்ஸ் 9

எய்ட்ஸ் 8

எய்ட்ஸ் 7

எய்ட்ஸ் 6

எய்ட்ஸ் 5

எய்ட்ஸ் 4

புதன், 6 அக்டோபர், 2010

காதல் கிறுக்கல்கள்



எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !

தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள்  ரசிப்பதற்காக !

உனக்குள் நான் !
யார் சொன்னது நமக்குள் நாமே !

ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !

நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத ?
உன் இமைகளின் காதல் பாசைகள் எனக்கு !

என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள் !

இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !

இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் 
எனக்கு புரிந்தால் !

நான்
னக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !

உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !

எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !

இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !

எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர
என்னை முழுமையாக
 புரிந்த கொள்ள யாரால் முடியும் !

எனக்கும் புரியவில்லை ?
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !

இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?

 
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!



MVIDHYASAN@GMAIL.COM . பாடகன்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

எய்ட்ஸ் 3

எய்ட்ஸ் 2

எய்ட்ஸ் 1

ஆப்பிள்


ஆதாம் ஏவாலின்
முதல் காதல் பரிசு...

நீயூட்டனை அறிமுகப்படுத்திய
அதிசய உலகம்

சிம்லா, காஷ்மீரின்
சிவப்பு தேவதைகள்...

5 இதழ்களுடைய
வெள்ளை நிற பூக்கள்..

7500 இன வகைகள்
கொண்ட மருந்துவன்...


மத்திய ஆசியா நிலப்பரப்பு
இதன் முதல் பிறப்பு...

இப்பொழுதும்...
பழக்கடையை கடக்கும் போதேல்லாம்
இமைக்காமல் பார்க்கிறது இமையில்லா ஆப்பிள் !!

திங்கள், 4 அக்டோபர், 2010

காதல் கடிதம்.



நீ கேட்ட அந்த நிமிடம்

வானம் வெள்ளை தாளானது

வானவில் எழுதுகோலானது

விண்மீன்கள் வார்த்தையானது

வெண்ணிலா, சூரியன் புள்ளியானது

அனுப்பிவைக்க காற்று தகுதியானது

படித்து பார்க்க உனக்கே உருவானது

படைத்து விட்டேன் அது உனக்கென்றதும்
ஏனோ கவிதையானது.

உன் முத்தம்




இரட்டை  அலை 

 
ஒற்றை முறை

 
என் மீது மோதியதில்

 
உடைந்தே போனது

 
என் மனக்கரை !!

தொலைவில் உன்னை

எனது நெடுந்தூர தனிமை பயணத்தில்
உன் நினைவே துணை....

மெளனம் நிலை கொண்டிருக்கும் தருணத்தில்
உன் பேச்சின் நினைவே இசை...

கனவுகளின் மடியில் நான் கைதாகும்போதெல்லாம்
உன் வருகையின் எதிர்பார்ப்பே சுகம்...

தென்றல் உரசி போகும் வேளையில்
உன் சுவாச நுனி தொடும் இதம்...

ஏதேதோ மாற்றம் நிறைந்த வழித்தடம்.
அந்த வழி எங்கும் நான் தேடி அலைவது
உன் கால் தடம்...


கலையும் மேகம் ஓவியம் கோடிவரைந்தாலும், 

மேகம் கூடி வரும் போதெல்லாம்
இமை எனும் தூரிகை உன்னையே வரைகிறது...

இயலாமையின் கொடுமை
இழப்பின் அருமை
பிரிவின் ஆழம்
துயரின் துயரம்
உணர்கிறேன்
நீ தூரம் சென்ற நிமிடம்...

கதை சொல்ல உதடுகள் காத்திருக்கிறது
எங்கே உன் செவி ?

பார்த்தே அதிசயிக்க துடிக்கிறது விழிகள்
எங்கே உன் முகம் ?

நனைந்து கொண்டே நடக்க பொழி
கிறது மழை
எங்கே உன் வருகை ?

தொலையும் வாழ்க்கையின் கரையில்
தொலைந்து, தொலைத்து தேடுகிறேன்
தொலைவில் உன்னை !!



பாடகன்

சனி, 2 அக்டோபர், 2010

நீ

உயிரோடு என்னைக் கொல்கின்றாய்
என் அன்பே...
உயிர் போனாலும் நியே என்றும்
என் கனவே...
அலையோடு கடல் பேசும்
உன் அழகே...
ஆதம் ஏவாளின்
நீ மகளே...


ஏதோ செய்கிறாய், ஏதோ சொல்கிறாய்
ஏனோ என்னை நீ  இழுக்கிறாய்....

என்னி ல் அறியாது, கண்ணில் தெரியாது
காற்றை  போல நீ நுழைக்கிறாய்...

புதுமாற்றங்களை நீ புகுத்திவிட்டாய்
எனை தோற்கடித்து  நீ தோற்றுவிட்டாய்!!

வாளும் இல்வை, போரும் இல்லை
காயம் நூறு நீ தந்தாய்...

வானம் இருந்தும், பூமி இருந்தும்
நீ ஏன் என்னை  தீவாக்கினாய்...

உயிர் மூச்சினிலே நீ கலந்து விட்டாய்
உன் பெயரை சொல்லி எனை தினம் புலம்பவிட்டாய் !!