செவ்வாய், 22 மார்ச், 2011

உன் வருகைக்காகவழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை

திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை

உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை
நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை

திசுக்கள் ஆனது குளிர் ஓடை
பொசுக்கென்று வா நீயே என் ஆடை

காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை
காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை

உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை
உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!


நம் காதல்என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....
 

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகு
ம் !!