வியாழன், 16 செப்டம்பர், 2010

அந்த தருணம்

எதிர் பார்க்க வில்லை
இது நிகழும் என்று...


இயற்கையில் மாற்றங்கள்
ஏற்பட்டதை உணரவில்லை...

சற்றும் தோனவில்லை
சந்தர்ப்பம் அமையும் என்று...


இதய கதவுகள் சாத்தியிருந்தும்
உள் நுழைந்தது எப்படி ?

இரு விழிகள் விழித்திருந்தும்
கனவாக மாறியது எதனால் ?

நடந்து முடிந்த நிமிடம் தாண்டி
இன்னும் நீங்கவில்லை நினைவு கரை மோதி

மறுபடியும் நிகழுமா
?
நீ....
கடந்து செல்லும் அந்த தருணம்!!


----------Mvidhyasan@gmail.com

கனவு


இது....
ஜன்னல்களை எட்டி பார்க்கும்
பூங்காற்று அல்ல...


எப்போதுமாய் ஏதோதோ
வந்து போகும் காட்சி அல்ல..


ரத்தம் பிலிறும் சத்தம்
லட்சியத்தின் வெறியில்
இரவின் உச்சியில் எழுந்த நர்த்தனம்
இந்த கனவு...
இது...

 இமைகளை மூடிக்கொண்ட
முனங்கல் அல்ல
விழிகளை கிழித்துக்கொண்டு
சீறி எழுந்த உணர்வு...

நரம்புகள்
போர்க்களமாக மாறும் !
உணர்வுகள்
உரக்க தாளம் போடும்!


ஏ... கனவே.... கனவே...
நீ களைந்து விடாதே !
நீ களைத்து  விடாதே !
தோல்வி கதறி
அழுது கேட்டாலும்
நீ கலங்கி விடாதே !
என்று முழங்கிய கனவு இது...

தோற்று, தோற்று
போனதெல்லாம்
நேற்று, நேற்று, என்று சொல்லி
போனகதை போதுமடா !
உயிர் கூட்டை விட்டு
பிரியும் கனம் எதுவென்று
தெரியாத பின்னே இன்னும்
தூக்கம் ஏனடா !
என்று எனை துப்பி
எழுப்பிய கனவு இது...

இமைக்கதவை உடைத்தெறிந்து வெளியே வா
விழித்துவிட்டால்
விண்ணும் தூரமில்லை
வியர்வை (சூரியன்)
விழாமல்
வெளிச்சம் (பகல்) இல்லை
என்று அணிச்சமாக
வந்த கனவிது....

தோல்வி கோடி வந்தபோதிலும்
ஓடி ஒழிந்து விடாது எதிர்த்து
மோதி உடைந்து தூளாகிவிடு !
காற்று உன்னை சுமக்க
காத்திருக்கும் !
ஒரு கனம் உலகை கடந்து பார்க்க
துடிக்கும்
என்று
உருமிய கனவிது...

கவலை சொல்லும்
நினைவை கல்லறையாக்கிவிடு !
நீ...
காலத்திற்கு
கையயழுத்து போட
தூக்கத்தை கலைத்துவிடு !

உறங்கியது போதும்
உடனே எழுந்து விடு !

உன்...
உடைவாளாய் நானிருக்கிறேன்
என்று உணர்த்திய கனவிது...

ம்....
கனவிது என்று
யார் சொன்னது
எனுது...
நகக் கண்களும் இப்பொழுது
விழித்திருந்து
பார்க்கும் போது கனவெல்லாம்
நிஜமானது!!
--Mvidhyasan@gmail.com