செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாண்டிய போது

கண்ணீரின் உலகம்;
வலியின் வசிப்பிடம்

துயரம் தூங்கும் விடுதி;
மரணம் விழுங்கும் ஆலயம்


அலரல் சப்தத்திற்கு நடுவே
அவரவர் இருப்பிடம்

வேதனையை தீர்க்க,
தீர்த்தம் தரப்படுகிறது மருந்தாக

 ரணம் ஆற, பல வண்ணத்தில்
வாயில் நுழைகிறது மாத்திரையாக

பெரும் சோக கதை;
நீளும் உடல் பரிசோதனை

நிஜமான வெள்ளை தேவதைகள்
இங்கே புன்னகையுடன் வலம்

அவ்வப்போது மறு பிறவி
அறுவை சிகிச்சை அறையிலிருந்து

மருத்துவர் பிரம்மாவாக;
மரண தீர்ப்பை ஒத்தி வைத்து எழுதும்போது

வீரனும், அறிஞனும், ஏழையும், யாராயினும்
ஒன்றுதானாம் இதற்கு முன் (நோய்)

எது எதுவோ பெரிது என்று
எண்ணிய என் மனதின்று;
இனி யாரும் - மறுமுறை
இங்கே வராதிருப்பதே சிறந்ததென்று;

உள்ளம் உணர்ந்தது
மருத்துவமனையை தாண்டிய போது !!