வியாழன், 14 அக்டோபர், 2010

சலித்து கொண்டது சாஜஹானை

நீ வருகின்ற கணத்தில்
சிறகு விரிக்கிறது எனது பாதைகள்...

நீ சிரிக்கின்ற நிமிடத்தில்
என் மணித்துளிக்குள் அடைமழை...

நீ முகம் சிவக்கும் தருணத்தில்
வர்ணம் பூசிக்கொள்கிறது என் வானம்...


நீ எனை நினைக்கும் வினாடியில்
துள்ளி குதிக்கிறது குழந்தையாய் என் மனம்..

நீ இம்மியளவு பிரிந்தாலும்
என் இமை இரண்டும் இமயமளவு துயர் கொள்கிறது...

நீ எனதருகில் இருந்தால் போதும்
என் சிறு இதயமும் சீனப் பெருஞ் சுவராய் மாறுகிறது...

நீ பொம்மையோடு விளையாடும் பொழுதெல்லாம்
யார் நிஜமென்ற உண்மை தெரிவதில்லை...

நீ உதடு ஒட்டி,நீட்டி பேசும் வேளையில்
ஒலிகள் எல்லாம் கை கட்டி கவனிப்பதுண்டு...

நீ மொட்டை மாடியில் நிற்கும் அழகில்
வட்ட நிலவு ஏக்கத்தில் தேய்வதுண்டு...

என்ன விந்தையடி ! உன் வடிவம் பார்த்து
தாஜ்மஹால் சலித்து கொண்டது சாஜஹானை !!

ஐ லவ் யூ