செவ்வாய், 29 மார்ச், 2011

தெரியும்


எடுத்தது தெரியும்....
திருப்பி
ரும்போது வாங்கிக் கொள்ள மனமில்லை
தொலைந்து போனது எனது இதயம் என்பதால் அல்ல
திருடியது அவன் இதயம் என்பதால் !!
vidhyasan@gmail.com........

செவ்வாய், 22 மார்ச், 2011

உன் வருகைக்காகவழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை

திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை

உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை
நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை

திசுக்கள் ஆனது குளிர் ஓடை
பொசுக்கென்று வா நீயே என் ஆடை

காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை
காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை

உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை
உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!


நம் காதல்என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....
 

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகு
ம் !!

வியாழன், 17 மார்ச், 2011

புரிய வைக்க முடியும்


என்னோட வருவதற்கும் மனமில்லை
விட்டு விலகவோ இருவருக்கும் மனமில்லை


அன்பில் இதுவே முதல் நிலை
நினைவுகளுக்கு ஏது எல்லை


எப்போதும் உனை தொடர்வதே வேலை
எனை துரத்துவதுவே உனக்கு அழகிய தொல்லை


யாருக்கு புவியில் இல்லை கவலை
தூக்கி எரிந்து விட்டு வா ஊடலை


ஒரு நிமிடம் என்னோடு இருந்து பார்
நிச்சயம் புரிய வைக்க முடியும்  என் காதலை !!

புதன், 16 மார்ச், 2011

அந்த நிமிடத்தில் ஜப்பான்விதையிலிருந்து ஒரு  அரும்பு புதுப்பித்த மணித் துளி
பட்டாம் பூச்சி ஒன்று தனது சிறகை திருப்பி பார்த்த வினாடி
கருவறையிலிருந்து குழந்தையின் தலை மட்டும் வெளிவந்த  தருணம்
காதல், ஆயிரம் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வேளை
காமம் கண்ணாடியாய் ஒட்டி பார்த்திருந்த பூஞ்சோலை
அன்பு வருடி வரவேற்றுக் கொண்டிருந்த கணம்

உறவுகளின் வேர்கள் ஆழப்படும் நேரம்
ஏதும் அறியாது தூக்கம் களவாடிக் கொண்டிருந்த நாளிகை
ஓர்அக்கிரமம் வக்ரமத்துடன் மீசையை முறுக்கிய கோலம்
முதுமை பழமையை ரசித்து வர்ணம் தீட்டிய ஜாலம்
இரும்பு பெட்டிக்குள் கணக்கு பார்த்த பணம்
விஞ்ஞானியின் புலம்பல் ஆரம்பம்பம்

அடுத்த தலைமுறைக்கு இணைத்து வைத்த செல்வம்
அறிவியலின் உச்ச வளர்ச்சியிட்ட அரை கூவல்
அணு உலைகளுக்குள் நடந்தேரிய ஆராய்ச்சிகள்
மனித முயற்சியின் முதுகெலும்பான இனத்தவரின் உரத்த சிந்தனைகள்

யாருக்கு தெரியும் ?

அடுத்த கணத்தில் அரங்கேரப்போகும் பயங்கரம் ?


ஒரு சில நிமிடத்தில்....
 நிலநடுக்கம்...

கடலுக்கு நிகழ்ந்த குழப்பத்தில் அலைகள் வாய் பிளக்க
கரை தாண்டி விரைந்தோடி வந்தது தண்ணீர் பெருக்கம்
அபாய குரல் .. அடி நாக்கின் தூரம் தாண்டவில்லை
இமைகளில் இருந்து கண்ணீர் முழுதாக இறங்கவில்லை
நினைவுகள் ஒரு முறை நினைக்க இடமில்லை

ஆழிபேரலை அள்ளிச் சென்றது எல்லையில்லா உயிரை...

பாதைகள் கற்காலமாய் ஆனது
வீடுகள் தீப்பெட்டி குச்சியாய் சிதறியது
வாகனங்கள் காகித கப்பலாய் மிதந்தது
எல்லாம் பிரவித்த மனிதனின் உடல் எங்கே புதைந்தது ?


மீண்டும் மீண்டெலுவோம் என்று ஊன்றுகோலாய் நின்றாலும்
மாண்டுபோன மனங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல ?
அழுவதற்கு கூட ஆள் இல்லாத இடத்தில்
அணு உலைகள் உறுமுகிறதாம் இனி யாரை கொல்ல ?


கடல் எல்லைகளை கைப்பற்றியது குற்றமா ?
அறிவியல் அனைத்தையும் வெள்ளும் எனும் ஆனவமா ?
அழிவு என்பது நிச்சயம் உண்டு என்ற அலட்சியமா ?
எதுவாக, யாராக, எப்படிபட்ட கேள்வியாக இருந்தால் என்ன ?
அங்கு இருந்தவருக்கு மட்டுமே தெரியும் அந்த நிமிடத்தில் ஜப்பான் !!

vidhyasan@gmail.com


செவ்வாய், 15 மார்ச், 2011

எப்போது வருவாய்...

எப்போது வருவாய்...

அடர்ந்த காடாய் இருந்தது என் உதயம்
அடை மழையாய் ஆனது உன் வருகையால்

...சுடும் பாலைவனமாய் என் மனது
மடை வெள்ளமாய் ஆனது உன் பார்வையால்...

நீ எப்போது வருவாய்
எனக்காக ஒரு நிமிடமாவது

நீ எப்போது வருவாய்
எனக்கே எனக்காகவே எப்போதுமாய்

நிமிடத்திடம் உலறியதை உணர்கிறேன்
செல்லும் வழி எல்லாம் நீயாக் கூடாதா என ஏங்குகிறேன்...

வந்து விட்டு செல் போதும்
நீ வந்த தருணத்தை எண்ணிக் கொண்டே
என் ஆயுளை தீர்த்து விடுகிறேன்....

மறந்து விட்டேன் என்று சொல் போதும்
நீ என்னை நினைத்து விட்டாய் என்ற
ஆதங்கத்தில் என் ஆண்டை நீளவிடுகிறேன்...

எப்போது வருவாய் நீ
எப்படி?

சொல்
சொல்
இல்லை
கொல்
கொல்
உடனே...

உனக்குள் இருக்கும்
மெல்லிய இடைவெளியில் நீயும், நானும்
சொல்லிக் கொள்ளும் தூரத்தில் நம் நாவும்
கேட்கும் நீளத்தில் நான்கு  செவியும்
இருப்பினும் இதயத்தில் ஏதோ உதறல்கள்...

எனக்குள் இருப்பதுதான் உ
க்குள்ளுமா ?
உனக்குள் இல்லாதிருப்பது எனக்குள் முளைத்திருக்குமா ?
ச்..சீ.. நமக்குள் என்றான பின் நினைவு மாறுமா ?

இப்படி கேள்விகள் ?  நிமிடத்தில் ஆயிரம்
இமைகளின் விலகலில் கூட உன் நினைவுகளை தேடிடும்
உனக்கும் இது தெரியும் என்பது எனக்கு மட்டுமே புரியும்...


மணி கணக்கில் யோசித்து வைத்திருப்பேன்
உன்னிடம் என்னவெல்லாம் அலாவலாம் என்று
நிமிடக் கணக்கில் மறந்திடுவேன்
நீ தொலைவில் வந்த தருணத்தில் ஏனோ தொலைந்திடுவேன்...


எப்படியோ, எப்போதாவது, எப்படியாவது
என் காதலை, சொல்ல நேரிடும் கணத்தை எதிர்பார்த்து
எதுவாகிய பின்னும், நீயே எனதுயிராவாய் என்றும்
அப்படித்தானா?  இப்படித்தானா ?  உனக்குள் இருக்கும்