புதன், 20 ஜூலை, 2011

வரம் தருவாயா ?

உன் கை பிடித்து ஊர் சுற்ற வேண்டும்
உன் விழி படித்து மனப்பாடம் செய்ய வேண்டும்
உன் மொழி கேட்டு இமை மூட வேண்டும்
உன் மடி சாய்ந்து சொர்க்கம் தேட வேண்டும்
உன் தோள் பற்றி கதை சொல்ல வேண்டும்

உன் நகம் கடித்து விரல் குடிக்க வேண்டும்
உன் கால் பிடித்து முத்தமிட வேண்டும்
உன் இடை வளைத்து இதயம் இணைக்க வேண்டும்
உன் முடி மீது முகம் நுழைத்து வாசம் நுகர வேண்டும்
உன் உள்ளங்கையில் என் எதிர்காலம் பார்க்க வேண்டும்

உன் உறக்கத்தில் என் உறக்கத்தை தொலைக்க வேண்டும்
உன் பக்கத்தில் உரசிக் கொண்டு உயிர் பேச வேண்டும்
உன் மூக்கோடு என் மூக்கு சண்டையிட வேண்டும்
உன் கூந்தழில் பூச்சூடி அதிசயிக்க வேண்டும்
உன் கைவளை ஒலியிலே என் காலை விடிய வேண்டும்

உன் இதழ் இரண்டும் என் பசி தீர்க்க வேண்டும்
உன் உலகம் என் உலகமாக வேண்டும்
உன் இமையோடு என் இமை புன்னகைக்க வேண்டும்
உன் உடல் முழுவதும் என் விரல் நீந்த வேண்டும்
உன் திட்டலுக்கு பின் எனை கட்டி கொள்ள வேண்டும்

உன் உயிரோடு என் உயிர் இணைய வேண்டும்
உன் கருவில் நம் உயிர் உருவாக வேண்டும்
உன் தாய்மை முழுவதும் நான் தாலாட்ட வேண்டும்
உன் கனவுக்கு தலையணை ஆக வேண்டும்
உன் சுமை கண்டு நான் சுகம் காண வேண்டும்

உன் இடை உலகத்தில் காது வைத்து உதை வாங்க வேண்டும்
உன் உயிராக என்னாக ஒன்று நீ பெற்றெடுக்க வேண்டும்
நம் உயிர் கண்டு என் கண்கள் ஈரமாக வேண்டும்
தொட்டிலுக்கும், கட்டிலுக்கும் நீ கவி பாட வேண்டும்
என் காலம் முழுக்க நீ கற்கண்டாய் வேண்டும்

கண்ணே...
என் உயிர் இறுதியில் உன் முகம் பார்த்து பிரிய வேண்டும்
வரம் தருவாயா ?

செவ்வாய், 19 ஜூலை, 2011

யாரோ ?



பெண்

யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...

ஆண்

உன் புன்னகைக்கு பின் கண்ணீர் கண்டு
என் நெஞ்சம் ஆனது முள்ளாய் இன்று....

பெண்

எது வரை நம் இருவரின் பயணமோ
உயிர் கரையினில் நம் நினைவுகள் கலந்திடுமோ

ஆண்

இமை விலகலில் தேடல் இன்னும் நீளுமோ
இருவரும் இனி ஒருவர் என்றாகுமோ....


பெண்

தவழ்ந்திடும் குழந்தையாய் என் மனம்
நீ தாவி அணைத்திட உயரமாகும் என் கரம்

நான்

என் நினைவினில் பூத்திட்ட புது சுகம்
நீ எனதிறுதிவரை வரும் நிழற் படம்


பெண்

காணும் கனவுக்குள் நீந்திடும் கானல் ஓடம்
கன்னத்தில் உதிரும் துளிகளும் பாரமாகும்

ஆண்

மறந்திடு கவலையை விட்டு பறந்திடு நீயும்
நீ இளைப்பாற என் தோளே மரக்கிளையாகும்

பெண்

இதுவரை எனக்கென்று ஏதுமில்லை நிரந்தரம்
இனி பயணங்கள் முழுவதும் உன் விரல் துணை வரும்


ஆண்

தயக்கங்கள் விடுத்திடு என்னிடம்
நடப்பது யாவும் இனி நம் வசம் !!


பெண்

யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...


ஆண்

நீயும் நான்
நானும் நீ
துளி பேதமில்லை  நம்மில் இனி !!

திங்கள், 18 ஜூலை, 2011

பொம்மையாய்


விளையாட்டு பொம்மையாய் அவள்
அதனால்தான்...
அவள் கைகயில் பொம்மையாய் மாற
ஆசைகள் எனக்கு !!

இதழ் கடிப்பாய்




நான் உனக்காக எது செய்தாலும்
நீ நன்றி சொல்வாய்...
வேண்டாம் என்பேன்....
புரிந்துவிட்டதாய் இதழ் கடிப்பாய் !!

குழந்தையாக


உன் வார்த்தைகள் எனை நெருங்கும் பொழுது
என் மொழிகள் எல்லாம் துள்ளிக் குதிக்கிறது
பொம்மையை கண்ட
சின்னஞ்சிறு குழந்தையாக !!

வெட்கம்




விழிகள் தலை சாய்த்துக் கொண்டது
இதழ்கள் மெல்ல சிவக்க ஆரம்பித்தது
இருதயம்  அதிர துடித்தது...

ஆசைக்கு  கைகள் நீண்டன
இமைகளின் குடைகள் சுருங்கின
உணர்வுகள் நில நடுக்கம் கண்டன...


பெண்மை மென்மையை உரசியது
மெளனம் எச்சிலை தேடியது
தேகம் தேய்பிறையாய் ஆனது...

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை  சொன்னது
வார்த்தைகளுக்குள் வைத்தியம் நடந்தேறியது
பருவத்தின் திமிர் பதம் பார்த்தது...


அசையும் வளைவுகளில் ஆயிரம் அதிசயம்
எந்த விழியாலும் படிக்க இயலாத புத்தகம்
இது யாருக்கும் புரியாது நிகழ்ந்த  தருணம்...

நீ...
எனை பார்த்து வெட்கப்பட்ட நிமிடம் !!

ஞாயிறு, 17 ஜூலை, 2011

வெண்ணிலவாக


நீ இல்லாத இரவில்

உனை தேடி தனிமையில்

இமைக்காது தேடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு நிமிடமும் தேய்ந்து கொண்டு...



வானத்து வெண்ணிலவாக !!

நாம் நாமானதால்

ம்... என்பது நீ
ம்கூம் என்பது நான்

காவலாக நீ
கவிகலாக நான்

நெஞ்சமாக நீ
நிழல்களாக நீ

மூச்சாக நீ
காற்றாக நான்

நிலாவக நீ
சுமக்கும் வானமாக நான்

இரவாக நீ
காணும் கனவாக நான்


உயிராக நீ
உடலாக நான்

நமக்காக நாம் என்று ஆன பின்பு
இனி...
எதற்காகவும் யவரும் நுழைய அனுமதியில்லைங
நாம் நாமானதால் !!