வியாழன், 25 ஜூன், 2015
ஞாபகங்கள்
நொறுங்கியப் பின் சிதறிய சில்லரைகளை உடைபட்ட உண்டியலில் சேமித்துவைக்க
இயலாததாய் முறிந்த ப்ரியங்களின் உணர்வினை எங்கே சேர்த்து மீண்டும்
மூடிவைப்பது என்பது கேள்விக்குறியாகிட பெரும் பாரம் வந்தமரும் நேசத்தின்
உடலெங்கும் ரணங்களின் தீராக் காயங்களில் ஞாபகங்கள் முள்ளாய் சொருகிட
வலியும் உவர் குருதி மெழுகாய் உரைந்திட நிலை தவறிய நிமிடங்களில்
பெருக்கெடுத்த வார்த்தையின் கீழ் பகுதியில் பீறிட்டழுகும் புலம்பலனின்
தனிமை மெளனம் நீடித்திட இருள் கவ்வும் வெளிச்சத்தின் சொற்பம் சர்பமாகிட
சொற்களின் விசம் வீரியமாகி விழுங்கி
குதூகலிக்க இயலாது கிடைபொருளாய் செயலிழந்து செரித்தல் மறந்திட்ட காலத்தின்
கட்டமற்ற காய்களற்ற தாயமற்ற ஆட்டத்தின் மத்தியில் நிறுத்தி பேரன்பே
இழப்பின் பெரும் காரண முகம் காட்டி பின் இருளில் தாளிட்டு தலை சாய்த்து
சாய்ந்திருக்கும் சடலமதில் சவமாய் தவமிருக்கும் நினைவு மெல்லமாய் கழுவேற்றி
துயில் குடிக்கிறது அறையின் நாற்புறமும் நீளும் நரக நாகமாய் ~~~
- வித்யாசன்
ஓம்...

அருள் தரும் திரு உருவமே
எம் நாக்கினை மெய்யாக்கிடு
நல் வாக்கினைத் தந்திடு
உலகில் உள்ளது யாவும் அறியேன்
உள்ளம் தெளிந்து நின் திருவடி தொழுதேன்
கள்ளம் மறந்து கனியாய் மாறிடவே
கசந்த வேப்ப மரத்தினில் இனிப்பானவளே
சிந்தை மறந்து நின் செவ்விதழ் காண்கையில்
சிரித்தெனைச் சேர்த்தனைத்திடும் செந்தமிழ் தாயே
சொல்லும் செயலும் சிறப்பாகவே
இந்நாள் செய்வது நின்னாள் ஆகுவதே
ஓம்.... ஓம்... ஓம்...
- வித்யாசன்
குரைக்கும் அனாதை
பொழுது கவிழ்ந்த இருள் முகத்தின் வனாந்திர மடியினில் தொலைந்துபோன வேகம்
யாவும் கூட்டிற்குள் அடைபட்டிருக்க வீதி எங்கும் வெளிச்ச
முகாமிட்டிருக்கும் உறக்கமற்ற விழியின் நிழலில் அடங்கிய ஒலிகளின்
குறுக்கெலும்பில் அமர்ந்து கூர்ந்து பார்வை வீசும் எச்ச ஓசைகளின்
மிச்சங்களில் நிகழும் புணர்தலின் கலைந்த கூந்தலில் அவிழ்ந்த மலர்களின்
மங்கிய வண்ணமதில் தோய்ந்தாடும் ரசனையின் பெருவெளியில் முகம் அலசி தடவுகிறது
சதுரங்க பெட்டியில் நிர்வாண பாசையை மென்றுவிட்டு அந்தரங்க பாடம் வாசித்த
புத்தகம் திறந்த நிலையில் தீராதுப்
பரவிக்கிடக்கும் வெற்றிடத்தில் மழித்த நினைவுக் காம்பிலிருந்து விரிகிறது
முன்னதனின் முதத்தங்களும் முடிவில்லா சப்தங்களும் எல்லா வரைமுறையும்
கோடுகளற்ற பாதையாவதன் தடையங்களை அழித்த பின்னும் சிந்திச் சிதறி ஞாபக்
கதவின் ஓரத்தில் குத்தவைத்து அமர்ந்த புலம்பிக் கொண்டிருக்கும் பேரன்பின்
பேசமுடியா மெளனங்கள் ஆடைகளற்று ஒவ்வொரு இரவிலும் குரைக்கும் அனாதை
நாய்களின் அழுகையாய் ~~~
- வித்யாசன்
அறுத்திடு

ஆசையற்று குருவியாய் பறந்திட
அமைதியில் நல் ஞானம் விளைந்திட
கேட்டது யாவும் கைகளில் கிட்டிட
பார்ப்பது யாவும் பரம் பொருளாகிட
நோய்மை வாட்டா வாழ்வது வாழ்ந்திட
பொய்மை சூட்டா வாய்மை பேசிட
பேதமைக் காட்டா பேரன்பு பெருகிட
பெரியவர் தம்மை தாழ்ந்து வணங்கிட
வஞ்சகம் கூட்டா நெஞ்சகம் பண்பட
வறுமை தீட்டா வளமது பொங்கிட
புண்படும் சொல் இதழ் சேராதிருந்திட
பயன்படும் செயல் ஆற்றல் நிறைந்திட
பிறர் குறை கூறா ஒருமனதாகிட
திரையிடா முகமது நேர் ஒளிபட
புகழது தேடா பொழுதுகள் பூத்திட
பகையது வளரா மன்னித்தருளிட
பசியது அறியா பண்டங்கள் கிடைத்திட
பாரினில் யாவரும் ஒன்றென நேரிட
படைத்தவனே மேலது அருளிட முடியாதென உரைத்திட
இவை அனைத்தும் மறந்து உனை தொழுதிட வரமிடு
அஃதில்லையேல் இக்கணமே இப்பிறவிப்பிணியை அறுத்திடு ~~~
- வித்யாசன்
கூழாங்கற்கள்

- வித்யாசன்
அடிமாடாய்

- வித்யாசன்
** கண்ணனுக்கு சமர்ப்பனம் **
ஓடோடி வருவாயடா
கண்ணா....
ஓடோடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ;
கண்ணா....
ஓடோடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ;
நீராடும் போதினிலே
பொய்கையில் நீராடும் போதினிலே
கள்வனாய் ஆடை கொய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
சபை முன்னிலே
பெரும் சபை முன்னிலே துகிலுரிகையிலே
பெண்ணவள் மானம் காக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
நிலை மாறிப்போகையிலே
மனம் நிலை மாறிப்போகையிலே
சிறு பிள்ளையாய் என்னுடன் விளையாட
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
சிலை போல நிற்கையிலே
செய்வதறியாது சிலை போல நிற்கையிலே
பக்கத்தில் மலைபோல துணையாக
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
பிழை செய்து பிசைகையிலே
அறியாப் பிழை செய்து கையைப் பிசைகையிலே
நிலையறிந்து துயர் துடைக்க
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
கவலை மீளாது நேர்கையிலே
தீராக் கவலை மீளாது துன்பம் நேர்கையிலே
குழல் ஊதி மனம் குளிரவைக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
காதல் பொங்கிப் பெருகுகையிலே
காணாது காதல் கண்ணில் பொங்கிப் பெருகுகையிலே
மாயவனாய் மறையாது கடல் அலையாய்
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
கோபத்தில் நானிருக்க
கடும் கோபத்தில் வார்த்தை போர்தொடுக்க
கட்டியணைத்து இதழ் காயம் செய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
மோகத்தில் மூழ்குகையிலே
பருவ மோகத்தில் தேகம் தீயாய் சுடுகையிலே
கருமேகமென உருவெடுத்து மழையாய் நனைத்திட
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா
போ எனச் சொன்னாலும்
பொய்யன் என வசைபாடினாலும்
கள்வன் என நிந்தித்தாலும்
மனம் கல்லெனக் கடிந்துரைத்தாலும்
மறந்தேன் என மறைத்தாலும்
ஒரு கணம்
நான் அழைக்க மறுக்காது
மறு கணம்...
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ~~~
- வித்யாசன்
பொய்கையில் நீராடும் போதினிலே
கள்வனாய் ஆடை கொய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
சபை முன்னிலே
பெரும் சபை முன்னிலே துகிலுரிகையிலே
பெண்ணவள் மானம் காக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
நிலை மாறிப்போகையிலே
மனம் நிலை மாறிப்போகையிலே
சிறு பிள்ளையாய் என்னுடன் விளையாட
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
சிலை போல நிற்கையிலே
செய்வதறியாது சிலை போல நிற்கையிலே
பக்கத்தில் மலைபோல துணையாக
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
பிழை செய்து பிசைகையிலே
அறியாப் பிழை செய்து கையைப் பிசைகையிலே
நிலையறிந்து துயர் துடைக்க
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
கவலை மீளாது நேர்கையிலே
தீராக் கவலை மீளாது துன்பம் நேர்கையிலே
குழல் ஊதி மனம் குளிரவைக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
காதல் பொங்கிப் பெருகுகையிலே
காணாது காதல் கண்ணில் பொங்கிப் பெருகுகையிலே
மாயவனாய் மறையாது கடல் அலையாய்
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
கோபத்தில் நானிருக்க
கடும் கோபத்தில் வார்த்தை போர்தொடுக்க
கட்டியணைத்து இதழ் காயம் செய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;
மோகத்தில் மூழ்குகையிலே
பருவ மோகத்தில் தேகம் தீயாய் சுடுகையிலே
கருமேகமென உருவெடுத்து மழையாய் நனைத்திட
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா
போ எனச் சொன்னாலும்
பொய்யன் என வசைபாடினாலும்
கள்வன் என நிந்தித்தாலும்
மனம் கல்லெனக் கடிந்துரைத்தாலும்
மறந்தேன் என மறைத்தாலும்
ஒரு கணம்
நான் அழைக்க மறுக்காது
மறு கணம்...
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ~~~
- வித்யாசன்
ஏதுமுண்டோ
என் எழுத்து என்று தனித்து
ஏதுமுண்டோ
நின்னகத்தே காதல் கொண்டே யாவும் பிறந்ததிங்கே
பின் தேடியும் பிரிவினைக் கிடைப்பதுண்டோ
தன்னகத்தென்று சொல்வது தகா தவறிங்கே
முன்னகத்து முகர்ந்து மூர்ச்சையாகுவதுண்டோ
பெண் மனது பித்தென்று மறைந்தாய் அறிந்திங்கே
எண்ணகத்தில் எனைவிடுத்து வேறு யாருமுண்டோ
விரைந்திங்கு நேர்கொண்டு சொல்லடா கண்ணா
வேதனை தாராது பேதையை தோளினில் தாங்கடா ~~~
ஏதுமுண்டோ
நின்னகத்தே காதல் கொண்டே யாவும் பிறந்ததிங்கே
பின் தேடியும் பிரிவினைக் கிடைப்பதுண்டோ
தன்னகத்தென்று சொல்வது தகா தவறிங்கே
முன்னகத்து முகர்ந்து மூர்ச்சையாகுவதுண்டோ
பெண் மனது பித்தென்று மறைந்தாய் அறிந்திங்கே
எண்ணகத்தில் எனைவிடுத்து வேறு யாருமுண்டோ
விரைந்திங்கு நேர்கொண்டு சொல்லடா கண்ணா
வேதனை தாராது பேதையை தோளினில் தாங்கடா ~~~
- வித்யாசன்
மடல் காகிதமாய்
வான் பார்த்த மழையாய்
நீ வந்தாய் சுகமாய்
இருள் சேர்த்த நிலவாய்
நீ இருந்தாய் துணையாய் ;
நீ வந்தாய் சுகமாய்
இருள் சேர்த்த நிலவாய்
நீ இருந்தாய் துணையாய் ;
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)