செவ்வாய், 16 நவம்பர், 2010

யாருக்கு தெரியும்

ஆயிர மாலைகள்
ஆள் உயர மாலைகள்
மலையாய் குவிஞ்சிருச்சு...

அவர் பெத்த ஆறு மக்கா
மண்ணில் அழுது புரண்டாச்சு...

பட்டு சருக வச்ச வேட்டி நூறு
கட்டு கட்டா வந்திறங்கிய சட்டை வேறு...

குளிப்பாட்ட பன்னீர், சுருட்டோடு,
அவருக்கு பிடிச்ச சாராய தண்ணீர்...

இரண்டாளு உயரத்துக்கு
பூச் செண்டால பின்னிய பல்லக்கு

தப்புத் தாளத்தோட புறப்புட்டாரு
நாட்டுப்புற நடனத்தோடு கிளம்பினாரு...

 
சாலை வெடிக்க சரவெடி
மேடு உடைய மொக்க வெடி
காடு அலற விசிலடி...

ஆட்டத்தோடு ஒய்யாரம்ம
அடக்கம் பன்னீட்டாங்கம்மா...

மூனாம் நாளு விஷேச முன்னு
மூனுமுற சொல்லிட்டாங்கம்மா...

பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு

அவரு பெத்த மக்கா ஆறும்
தூரத்து சொக்காரரும்
கூடி ஒன்னா சேர்ந்தாச்சு
அவரு பெருமை எல்லாம் பேசி
மூலைக்கு மூலை-மூக்க சீந்தியாச்சு...

உச்சி வேளை வச்தாச்சுன்னு
பெரிசு குரல் பெரிசா எழுப்ப...

வெட்டி வச்ச பத்தாடு பத்தாதுன்னு
பக்கத்து வீட்டு முத்தம்மா ஆடு
தொங்குது முற்றத்துல்ல...

நேத்து அருத்த நெல்ல
கொதிக்க வச்சு இறக்கியாச்சு...

படப்புக்கு பருப்பு சோறு
பக்குவமா கிளறிவச்ச கூட்டாஞ்சோறு
பத்தாம்பள கிளம்பியாச்சு இடுகாட்டுக்கு...

அய்யர வச்சு ஓதியாச்சு
அவுக,அவுக கட்டு முடிஞ்சாச்சு
புதுசா சொக்கா எல்லாம் உடுத்தாச்சு
படைப்ப வச்சு சாமி கும்பிட்டாச்சு
காகம் தின்னத பார்த்தாச்சு...

பக்குவமா
வீடு வந்து சேர்ந்தாச்சு...

அவுக படத்துக்கு மாலை
சூடம், பத்தி காமிச்சாச்சு...

இனி...
காக்கும் கடவுள் நீங்கதானு
கண்ணு கலங்கி
கன்னத்துல்ல இரண்டு போட்டாச்சு...

 
வந்தவங்க எல்லாம்-ஒரு நாளு
வானம் போவது
வழக்கமுன்னு பெரு மூச்சு விட்டு
பந்தி அமர்ந்து-அவரு
பழங்கதை பேசி
பானை வயிற நிறப்பியாச்சு..

தொந்தி வயிற நெப்பி
எல்லாம் அவஞ் செயலுன்னு
அவுக,அவுக ஊருக்கு
முந்தி -கிளம்பியாச்சு...

பாவம்...
பரம சிவம் பட்டினியா
போய் சேர்ந்த கத
யாருக்கு தெரியும்
என்ன?

---MVIDHYASAN@GMAIL.COM---