திங்கள், 18 அக்டோபர், 2010

இழைக்கிறது எனது இருதயத்தை

உனது மெளனத்தின் கரை உடைகையில்
எனது வார்த்தைகளின் சருக்கள்கள்
கிளிஞ்சல்களை பொறுக்குகின்றன.... 

உனது இமைகள் கைத்தட்டி திறக்கையில்
எந்தன் காட்சிகளில் வண்ணத்து பூச்சிகளும்,
வானவில்லும் சாயம் பூசிக் கொள்கின்றன...

உனக்குள் தவறி விழுந்த வார்த்தைகள் எல்லாம்
என் தோளில் சாய்ந்தபடி கதைகள்
சொல்லிக் கொண்டிருக்கிறது தினமும் தனிமையில்...

நெடுந்தூர பாதையில்,யாருமில்லா பயணத்தில்
தொடந்து வந்து, விரல் கோர்த்து அழைத்துச்
செல்கிறது உந்தன் நிழல் தோற்றங்கள்...

உடைந்துபோன பொம்மையாய்
நானிருந்த போதெல்லாம், மறைந்திருந்து
மென்மையாய் ஒட்டவைக்கிறது உந்தன் நினைவுகள்...

இரவுகளின் துயரங்களில் இமைகள், கதவடைக்கும்
தருணங்களில், கனவுகளின் வாசல்களில்
கோலங்கள் வரைகிறது, உந்தன் கால்தடங்கள்...

மண்ணோடு உரசி பறக்கும் சருகைபோல,
என்னோடு... உள்மூச்சில் உரைந்து கிடக்கிறது
உன் உதடுகள் உதிர்த்த நேசங்கள்...

நூலிழையில் பிரிவுகள் நிகழ்கையில்
உனது இணைகையின் நினைவுகள்
கொஞ்சம், கொஞ்சமாக இழைக்கிறது எனது இருதயத்தை !!
ஐ லவ் யூ

நீ வந்த தருணத்தில்

பனித் துளிகள் எல்லாம் நிலவாய் ஆனது
எந்தன் காலையில்...
மர இலைகள் எல்லாம் இதயமாய் மாறுது
எந்தன் சாலையில்....

மழைத் துளிகள் எல்லாம் பூவாய் ஆனது
எந்தன் வானத்தில்....
ஒவ்வொரு நிமிடமும் தீவாய் மாறுது
எந்தன் கடிகாரத்தில்...


தொடரும் அலைகள் போர்வையானது
வானவில்லில் வண்ணம் கூடியது
மின்னல் நின்று புன்னகைத்தது
ஜன்னல் தீண்டி தென்றல் வியர்த்தது !

சுடும் சூரியன் சுருங்கிப் போனது
தொடும் தூரத்தில் மேகம் போகுது
வின்மீன் எல்லாம் இமைத்து பார்த்தது
தண்ணீர் எல்லாம் தவழும் குழந்தையானது!


புல்லின் நுனியும் கத்தியானது
பூமி, வானம் இடம் மாறுது
இரவு இன்று மயிலிறகானது
இருளும் கூட ஓவியமானது !

பூமி சுற்றும் திசை மாறுது
பூங்காற்றும் இசை மீட்டுது
ஓரப்பார்வை உயிர் வேரை அசைத்தது
தேக அசைவு இதயம் தேய வைத்தது !

மாலை நேரம் வெட்கம் கொண்டது
மலைகள் யாவும் பூங் கொத்தானது
கை ரேகை எல்லாம் பாதையானது
பொய் கூட உனக்கென்றதும் கவிதையானது !

இது எல்லாம் எப்படி நடந்தது
நீ வந்த தருணத்தில் நிகழ்ந்தது !
சேர்ந்திசை