ஞாயிறு, 28 நவம்பர், 2010

இரும்பு காதலி

கதவு காது அணிந்து கொள்ளும்
கனத்த தோடு...

கறுப்பு பணத்தை காவல் காக்கும்
கருப்பசாமி...

சுதந்திரம் இருக்கி அனைத்தப்படி
தொங்குகிறது இரும்பாக...

சாமி சாக்கரதையா இருக்க அர்ச்சகர்
பூட்டும் கதவு விலங்கு...

வீடு, அலுவலக வாயிலில் விழித்துக் கொண்டிருக்கும்
ஒற்றைக் கண் காவல்காரன்...

பலகோடி இதயங்களை பத்திரப்படுத்தும்
பயமறியா பயில்வான்...

குடிசை மீது ஏறி நிற்கும் பங்களாவை
விழுங்கும் குட்டி நாக்கு...

திருடர்களின் விரல்கள் தொட்டதும்
நெஞ்சை நிமிர்த்திடும் மா வீரன் ....

ஒருவனை மட்டும் தொடவிட்டு
இதய அறையை திறந்து காட்டும்
இரும்பு காதலி  
!!பூட்டு !!
 
Mvidhyasan@gmail.com.............பாடகன்


-----வித்யாசன்