புதன், 29 ஏப்ரல், 2015

யாவும் ஆனவனே

மூன்று விழியனே
ஆதி முதல்வனே
மோட்ச வழியனே
நீதி மொழியனே
யாவும் ஆனவனே
மாயை அறிந்தவனே
ஆணவம் அழிப்பவனே
ஞானம் அளிப்பவனே
வானமாகி நிறைந்தோனே
நல் கானமாடும் நடராஜனே
பிறை மதி சூடிய சடையனே
துயர் நீக்கிடும் தூயனே
நான் பயன் என்ன செய்தேனோ சங்கரனே
நின் பாதம் சரண் புகுந்து எனை மெய் மறந்தே சாம்பலாய் ஆவேனே ~~~


- வித்யாசன்

கம்பீரமவன்

கெளரவத்தின் மூத்தோன்
திருதராஷ்டினனின் இரு கண்
காந்தாரியின் சதைப்பிண்டன்
புதையிட்ட வெண்ணைய் குடத்தில் உதித்தோன்
கதாயுதத்தில் பலராம சீடன்
சகுனி மாமன்
துச்சாதனின் தூண்
கர்ணன் உயிர் நண்பன்
பானுமதியின் கணவன்
கிருஷ்ணனின் சம்பந்தன்
பேராசையின் முதல்வன்
ஆணவத்தின் ஆதியானவன்
குருசேத்திரத்தின் குருதியானவன்
பெரும் உறுதியானவன்
பீமனால் தோற்கடிப்பட்டவன்
தொடை பிளந்தும் கர்ஜித்தவன்
முன்னவன் சுயோதனன்
பின்னவனே துரியோதனன்
பேரழகன்
மகாபாரதத்தின்
கம்பீரமவன் ~~~


- வித்யாசன்

ஆணுக்குமுண்டு

மூத்திரம் ஒளித்து வைத்திருக்கும் பாதைக்கும்
முன்னால் வளர்ந்திருக்கும் பாலுறுப்புக்கும்
காத்திரம் கெட்டு மனப் பாத்திரம் நழுவிடலாமோ
காம ஆத்திரத்திற்கு இறையாய் பெண்ணை பலியிடலாமோ
சத்தியமாய் கற்பென்பது ஆணுக்குமுண்டு~~~


- வித்யாசன்