செவ்வாய், 30 நவம்பர், 2010

அவளும்-நானும் உரையாடல்- 4

அவள்
என்ன வெகு நாட்களாக காணவில்லை

நான்
கரை கடந்து கரைந்து கொண்டிருந்தேன் உன் நினைவில்

அவள்
        ம்ஹீம்.....

நான்
நீ என்ன செய்தாய்

அவள்
ரசிப்பவர் எப்போது வருவார் என்று உள்ளங்கை ரேகையில் தேடிக் கொண்டிருந்தேன்...

நான்
ம்ம்.....

அவள்
இன்று என்ன ?

நான்
என்னை தேடிக் கொண்டிருந்த உனதுள்ளங்கை பற்றி

அவள்
ம்ம்ம்.... சொல்லுங்க

நான்
நான் மட்டும் நடந்து செல்லும் சாலை
மீன்கள் நீந்த துடிக்கும் நதி
இலைகள் இல்லாத கிளை
மின்னி மறையாத மின்னல்
அழியாத அழகிய கோலம்
இசை மீட்டும் தந்தி
பூக்கள் கட்டிக் கொள்ள ஏங்கும் நார்
வண்ணத்து பூச்சி பொறமை கொள்ளும் நூலிழை
இளவம் பஞ்சு இளையாறும் படுக்கை
காற்று வந்தமரும் இருக்கை
விதையில்லா வேர்
விழிகள் விளையாடும் சதுரங்கம்
சிலந்தி பூச்சி கட்ட முடியற்சிக்கும் கூடு
முகம் காட்டாத ஒட்டி/உடைந்த கண்ணாடி
குறுக்கு, நெடுக்காக கட்டப்பட்ட கோபுரம்
வண்ணங்கள் ரசிக்கும் ஓவியம்
வற்றாது பாயும் நீர்வீழ்ச்சி
மணல் இல்லா பாலைவனம்
சிதறி கிடக்கும் சிப்பி ஓடு
மிதந்து உறங்கும் அதிசய கோடு
இயற்கையால் பின்னப்பட்ட கயிறு
உதிராத மரப்பட்டை
மிகப் பெரிய இறகு
மேகம் உரச தவமிருக்கும் முகடு
கூட்டல், பெருக்கல், வகுத்தல் காட்டும் கணக்கேடு
ரசிக்க வைக்கும் ரகசிய கிறுக்கல்
ஒவ்வொரு தடங்களும் புதுமை
ஆயிரம் உவமைகளை ஒலித்து வைத்திருக்கிறது
உனது உள்ளங்கை!!


அவள்
       ம்ம்.........

நான்
குறைவாக சொன்னதை அறிவேன்
நிறைவாக இன்னொரு நாள் சொல்கிறேன்
இப்போது விடை பெறுகிறேன்...


அவள்
அடுத்து எப்போது ?

நான்
சந்திப்பு நடக்கும்போது !!
அன்பு மலர்

Mvidhyasan@gmail.com.................


ஞாயிறு, 28 நவம்பர், 2010

இரும்பு காதலி

கதவு காது அணிந்து கொள்ளும்
கனத்த தோடு...

கறுப்பு பணத்தை காவல் காக்கும்
கருப்பசாமி...

சுதந்திரம் இருக்கி அனைத்தப்படி
தொங்குகிறது இரும்பாக...

சாமி சாக்கரதையா இருக்க அர்ச்சகர்
பூட்டும் கதவு விலங்கு...

வீடு, அலுவலக வாயிலில் விழித்துக் கொண்டிருக்கும்
ஒற்றைக் கண் காவல்காரன்...

பலகோடி இதயங்களை பத்திரப்படுத்தும்
பயமறியா பயில்வான்...

குடிசை மீது ஏறி நிற்கும் பங்களாவை
விழுங்கும் குட்டி நாக்கு...

திருடர்களின் விரல்கள் தொட்டதும்
நெஞ்சை நிமிர்த்திடும் மா வீரன் ....

ஒருவனை மட்டும் தொடவிட்டு
இதய அறையை திறந்து காட்டும்
இரும்பு காதலி  
!!பூட்டு !!
 
Mvidhyasan@gmail.com.............பாடகன்


-----வித்யாசன்

செவ்வாய், 16 நவம்பர், 2010

யாருக்கு தெரியும்

ஆயிர மாலைகள்
ஆள் உயர மாலைகள்
மலையாய் குவிஞ்சிருச்சு...

அவர் பெத்த ஆறு மக்கா
மண்ணில் அழுது புரண்டாச்சு...

பட்டு சருக வச்ச வேட்டி நூறு
கட்டு கட்டா வந்திறங்கிய சட்டை வேறு...

குளிப்பாட்ட பன்னீர், சுருட்டோடு,
அவருக்கு பிடிச்ச சாராய தண்ணீர்...

இரண்டாளு உயரத்துக்கு
பூச் செண்டால பின்னிய பல்லக்கு

தப்புத் தாளத்தோட புறப்புட்டாரு
நாட்டுப்புற நடனத்தோடு கிளம்பினாரு...

 
சாலை வெடிக்க சரவெடி
மேடு உடைய மொக்க வெடி
காடு அலற விசிலடி...

ஆட்டத்தோடு ஒய்யாரம்ம
அடக்கம் பன்னீட்டாங்கம்மா...

மூனாம் நாளு விஷேச முன்னு
மூனுமுற சொல்லிட்டாங்கம்மா...

பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு

அவரு பெத்த மக்கா ஆறும்
தூரத்து சொக்காரரும்
கூடி ஒன்னா சேர்ந்தாச்சு
அவரு பெருமை எல்லாம் பேசி
மூலைக்கு மூலை-மூக்க சீந்தியாச்சு...

உச்சி வேளை வச்தாச்சுன்னு
பெரிசு குரல் பெரிசா எழுப்ப...

வெட்டி வச்ச பத்தாடு பத்தாதுன்னு
பக்கத்து வீட்டு முத்தம்மா ஆடு
தொங்குது முற்றத்துல்ல...

நேத்து அருத்த நெல்ல
கொதிக்க வச்சு இறக்கியாச்சு...

படப்புக்கு பருப்பு சோறு
பக்குவமா கிளறிவச்ச கூட்டாஞ்சோறு
பத்தாம்பள கிளம்பியாச்சு இடுகாட்டுக்கு...

அய்யர வச்சு ஓதியாச்சு
அவுக,அவுக கட்டு முடிஞ்சாச்சு
புதுசா சொக்கா எல்லாம் உடுத்தாச்சு
படைப்ப வச்சு சாமி கும்பிட்டாச்சு
காகம் தின்னத பார்த்தாச்சு...

பக்குவமா
வீடு வந்து சேர்ந்தாச்சு...

அவுக படத்துக்கு மாலை
சூடம், பத்தி காமிச்சாச்சு...

இனி...
காக்கும் கடவுள் நீங்கதானு
கண்ணு கலங்கி
கன்னத்துல்ல இரண்டு போட்டாச்சு...

 
வந்தவங்க எல்லாம்-ஒரு நாளு
வானம் போவது
வழக்கமுன்னு பெரு மூச்சு விட்டு
பந்தி அமர்ந்து-அவரு
பழங்கதை பேசி
பானை வயிற நிறப்பியாச்சு..

தொந்தி வயிற நெப்பி
எல்லாம் அவஞ் செயலுன்னு
அவுக,அவுக ஊருக்கு
முந்தி -கிளம்பியாச்சு...

பாவம்...
பரம சிவம் பட்டினியா
போய் சேர்ந்த கத
யாருக்கு தெரியும்
என்ன?

---MVIDHYASAN@GMAIL.COM---

திங்கள், 15 நவம்பர், 2010

உதவாதது-உயிரானது


நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...

உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்...

நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...

உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொலுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...

உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...

உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...

நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...

உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...

உன்னுடைய....
கூந்தல் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...

நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன் !! 
ஐ லவ் யூ 

-MVIDHYASAN@GMAIL.COM-

திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி


இருட்டை கிழித்து பிறக்கட்டும் புது வழி
மத்தாப்பு புன்னகையில் கரையட்டும் கண்ணீர் துளி...


வறுமை கோலம் உடைய வானவெடி
அடிமை எரித்து, புதுமை உடுத்தி கும்மியடி...

உடலோடு, உள்ளமும் உடுத்தட்டும் புத்தாடை
ஒவ்வொரு இதயத்திலும் வீசட்டும் இனிப்பு வாடை...


ஒன்றே யாவரும் என்று கூடி வெடி,வெடி
நன்றே செய்வோம் என்று சொல்லி கொடி பிடி...

விடியும் பொழுது ஒளிர- ஏற்று தீப ஒளி
முடியும் என்ற திண்ணம் கொண்டு துவங்கட்டும் தீபாவளி !!

பாடகன் அன்பு மலர் பாடகன்

நிலா வரைந்த நிலாக்கள்

வெள்ளைத் தாளில் விளையாட்டாய்
வைத்தாய் புள்ளியாய்...

தலை சீவி, கூந்தல் சிரிக்க
கோர்த்தாய் பூவாய்...

தேகம் தீண்டி மோகம் கொள்ள கழுத்தில்
சூட்டினாய் பாசி மணியாய்...

தென்றல் அமர்ந்து ஊஞ்சலாட செவியில்
மாட்டினாய் தோடாய்...

உரசி, உரசி ஓவியமாக கைகளில்
பூட்டினாய் வளையலாய்...

தூங்கும் போதும் கதை பேச
அணிந்தாய் பாத கொழுசாய்...

பணி செய்யும் போதெல்லாம்
வடித்தாய் வியர்வை பனியாய்...

அப்பொழுதெல்லாம் எனக்கு
புரியவில்லை...

நிமிர்ந்து வானம் பார்த்தேன்
வெண்ணிலா தென்படவில்லை...

என்னவள்
அருகில் வந்து பார்த்தேன்...

அவள்...
தேய்த்து சுட்டு கொண்டிருந்தாள் வெண்ணிலவை !

அன்பு மலர் (சப்பாத்தி,தோசை,இட்லி -இதுல எதுவாகவும்) அன்பு மலர்

பின்புதான் அறிந்தேன்

உனை தொட்டதெல்லாம்
நிலா வரைந்த நிலாக்களாக மாறுமென்று !!

என்னிடம்...
ஏக்கத்தோடு கேட்டது
வானம்-வெண்ணிலவை
எப்போது விடுதலை செய்வாள் என்று !!!

அன்பு மலர் 
M.VIDHYASAN@GMAIL.COM.........................