வெள்ளி, 29 அக்டோபர், 2010

தென்படும் மறு பிறவியின் எல்லை

இலைகளின் மரணங்களால்
மரங்கள் மரித்து போவதில்லை ..

மேகங்கள் கலைவதால்
வானம் மெலிவதில்லை ...

உடல் உருகுவதால்
மெழுகுவர்த்தி ஒளியை குறைப்பதில்லை ...

குடை பிடிப்பதால்
மழை கொஞ்சுவதை நிறுத்துவதில்லை ...

பாதங்கள் மிதிப்பதால்
பாதைகள் பழிப்பதில்லை ...

அலை அடிப்பதால்
கரைகள் காயமாவதில்லை...

வண்டுகள் அமர்வதால்
பூக்கள் வசைபாடுவதில்லை...

மேகம் இருளை சூடுவதால்
வெண்ணிலா வெளிச்சத்தை குறைப்பதில்லை...

வானம் ஒழுகுவதால்
பூமி இட மாற்றம் செய்வதில்லை...

வீட்டை சுமப்பதால்
நத்தை ஓய்வெடுப்பதில்லை...

உயரம் என்பதால்
பறவை கூடு கட்ட மறுப்பதில்லை...

நிலை மாறும் வாழ்க்கையில்
இழப்பதற்கு உனதென்று ஏதுமில்லை...

உடைந்து ஒடுங்கிட விட
நீ ஒன்றும் கல்லறை இல்லை...

எதுவந்த போதும் எதிர்த்து நில்
மரணம் கூட உன்னை நெருங்க-தென்படும் மறு பிறவியின் எல்லை !!

Mvidhyasan@gmail.com ............................அன்பு மலர்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்


நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்


நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்


அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்


நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு


நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்


அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி


வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
சிரித்து சிதைக்கும் சோவி
வேர் விட்டிருக்கும் விதை 
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை

 நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
தனக்குத் தானே வீசும் விசிறி
புகைப்படம் எடுக்கும் கேமரா
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


 Mvidhyasan@gmail.com..........................
அன்பு மலர்