வெள்ளி, 13 மே, 2011

நிலா

தூரத்தில் நீ
தொடர்ந்து தேய்வது நான்

வட்டமாய் நீ
வட்டமிடுபவனாய் நான்

வெளிச்சமாய் நீ
உன் வருகைக்காகவே இரவாய் நான்

புள்ளியாய் நீ
சுற்றி அலையும் மேக புகையாய் நான்

பந்தாய் நீ
தட்டி விளையாடுகிறேன் இமைகளால் நான்


பனித்துளியாய் நீ
ஒவ்வொரு முறையும் உருகுகிறேன் நான்

அப்பளமாய் நீ
பார்த்தே பசியாருகிறேன் நான்

சக்கரமாய் நீ
சுழலும் பொழுதாக நான்


பொட்டாய் நீ
தொட்டாடும் மர இலையாய் நான்

வெண் "மை" யாய் நீ
நிரப்பிக் கொள்ளும் பேனா வாக நான்

கண்ணாடியாய் நீ
முகம் பார்க்க முடியாதவனாய் நான்

பலுனாய் நீ
பறப்பவனாய் நான்

பழமாக நீ
பறிக்க முடியாதவனாக நான்
நிர்வாணமாய் நீ
கண்கள் கூசியபடி வெட்கத்துடன் நான்

நாணயமாக நீ
சேமிக்கும் நாயகனாக நான்

ஒலிந்துகொள்வாய் நீ
தேடுபவனாக நான்

காதலியாக நீ
காதலனாக நான்
தனிமையாய் நான்
தேவதையாய் தேடி வருகிறாய் நீ !!

இயங்கும் பிணமாய்


உன் நினைவை மட்டும் தந்துவிட்டு
தனிமை காட்டில் விட்டுவிட்டாய்

உன் மொழிகளை மட்டும் வீசிவிட்டு
நாவறுந்த வனத்தினில் நடக்கவைத்தாய்

உன் கனவுகளை மட்டும் கொடுத்துவிட்டு
இரவே இல்லா வானத்தை காட்டினாய்

உன் புன்னகையை கடலாக்கிவிட்டு
கரையில் நின்று கண்ணீரை பொறுக்கவிட்டாய்

உன் நேசத்தை சிந்தி விட்டு
ஸ்வாசம் தீரும்மிடத்தில் மீனாய் தத்தளிக்கசெய்தாய்


உன் ஓவியத்தை கலைத்துவிட்டு
காலத்தடத்தை தேடி அலையவிட்டாய்


தூரத்து மின்னலாய் மறைந்துவிட்டு
எனை இயங்கும் பிணமாக்கிவிட்டாய் !!

சாரல்கள்

நினைவுகளின் உரசல்களில்
கனவுகளின் கால்தடங்கள் பதிகிறது

நிமிடங்களின் வழிநெடுகெங்கிலும்
நிஜங்களின் பிம்பங்கள் கரைகிறது

தடுமாறும் பயணங்களில்
தவிப்புகளின் விரல்கள் வருடுகிறது...

அலைமோதும் விநாடிகளில்
இதய கரைகள் கிளிஞ்சல்களை தேடுகிறது...

இளைபாறும் தருணங்களில்
நிழலின் மடிகளில் தனிமை பேசுகிறது...

மரணங்களின் வேதனைகள்
உண்மை காதலில் உயிர்க்கிறது...

கானலின் தூரத்தில்
தாகித்து நாக்குகள் ஏங்குகிறது...

நேசத்தின் உணர்வுகளில்
வேசங்கள் முகமூடி அணிகிறது...

உடைந்திடும் பொழுதினில்
மனம் முகம் காட்டும் கண்ணாடியாகிறது...

யார் அறியக் கூடும்
உனக்குள் பூக்கும் உயிர்ப்புகளை எல்லாம்...

போடா

எதுவும் நடக்கட்டும் போடா
உலகத்தில் கவலையில்லா மனிதன் யாரடா
சென்றவர்கள் போகட்டும் போடா 
சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாய் இறந்தது இல்லையடா...பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை கையில்
இறக்கும்போது ஏதும் சொந்தமில்லை மண்ணில்
வருவது வரட்டும் விட்டுவிடுடா 
வாழ்க்கை என்றாலே இழப்புதானடா....வாழ்ந்தவர் எல்லாம் இறுதில் சொன்னது ஒன்றுமில்லை
வாழ்வில் அனுபவத்தை தவிர்த்து ஏதுமில்லை
உறவுகள் உதிரட்டும் போடா 
உன் அழுகைக்கு நீயே காரணமடா....ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்
ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்
வானமுண்டு, பூமிவுண்டு போடா 
யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடாபோவதும் வருவதும் மாயைதானே
காதலும் பருவமும் காயம்தானே 
உண்மைகள் நானே போடா
இந்த உலகம் து சொன்னால் என்ன போடா!!


நான் வாழும் காதல் பூகோளம்

ஏதேதோ தோன்றும்
எல்லாமே மாயம்
தீயாக மாறும்
உன் தேகம் தேடும்
இரவெல்லம் ரணம்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

இதயம் வேரோடு சாயும்
இளையுதிர் காலமாய் நிமிடங்கள் மாறும்
உயிர் கூடு வாடும்
விழும் வார்த்தைகள் தடுமாறும்
விடியாத இரவாக எப்போதும் தோன்றும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

போதையின் உச்சியிலும்
உன் முகமே வந்தாடும்
பாதையின் வழி எங்கும்
உன் நினைவே பந்தாடும்
உணர்ச்சிகள் வெறிகொள்ளும்
விடும் மூச்சும் எனை கொல்லும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


ஒரு பக்கம் சரியுதடி
மறு பக்கம் உடையுதடி
நடு பக்கம் ஏனோ நரகங்கள் தேடுதடி
ஒரு விழியில் வலி கொல்லுதடி
மறு விழியில் உயிர் வழியுதடி
என் நான்கு இமைகள் மட்டும் முள்ளாக மாறுதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து
உன் பாதம் தொழுகுதடி
கல்லெல்லாம் உனைதேடி
காதல் கண்ணீராய் வடிக்குதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மதி கெட்டுபோனது
விதி எட்டி நிற்கிறது
புவி முற்றும் எனக்கு
ஒரு புள்ளியாய் ஆனது
மரங்களுக்கு சொந்ததமில்லை
பிறக்கின்ற இலைகளுக்கு
வானங்கள் நிரந்தமில்லை
வலம் வரும் நிலவுக்கு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் மடிமீது சாய்ந்திடும்
தருணங்கள் என் தலை கேட்கும்
உன் உருவங்களை காணும்
நிமிடங்களை என் விழி கேட்கும்
அதிகாரம் செய்யாதே
காதல் அவமானம் அறியாததே
மெளனங்கள் மீட்டாதே
புது மரணங்கள் காட்டாதே
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


இறைவா.. இரவே இல்லாத
ஒரு உ
கம் எனக்கென படைத்துவிடு
மனம் உள்ளே ஆடையின்றி
ஆடும் பேய்களை கொன்று விடு
அவளை பார்த்
து குற்றம் என்றால்
என் இரு விழி
களை நீக்கிவிடு
மீண்டும்.மீண்டும் அவளை விரும்பும்
இதயம் இல்லா உடலை தந்துவிடு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...