சனி, 4 செப்டம்பர், 2010

ஒவ்வொரு முறையும்

மரணங்களின் வலியை
தாண்டியது உன் நினைவு...

துன்பத்தின் உச்சியில்
கொண்டு சேர்க்கிறது உன் பிரிவு...

ஒரு முறை...
நிமிடங்களிடம் மண்டியிடுகிறேன்
மீண்டும் உன் நினைவை தூண்டாதே என்று...

மறு முறை...
கணங்களிடம் கையேந்துகிறேன்
உன் கனவோடு கரைந்து உயிர் போகவே...

என் கவனம்...
எல்லாவற்றையும் கட்டி போடுகிறது
உனது மெளனம்....

உள்ளுக்குள்ளே புதைத்து...
கல்லரை கட்டிய போதும்
புன்னகைத்து பூக்கிறது...

உயிரின் வேர் வரை சென்ற
உனது நினைவுகள் ஒவ்வொரு முறையும் !!

-வித்யாசன்




நினைத்து துடிக்கவே

இரவுகளின் கனவுகளில்
அடையாளம் பதிக்கிறது
உனது கால்தடம்...

நினைவுகளின் கரைகளில்
தழும்ப ஓடுகிறது
உனது ஞாபகங்கள்...

இரவின் மடியில்
தனியாய் விழித்திருக்கிறோம்
நிலவும், நானும்...

நிமிடங்களின் இடையே
குடை பிடித்து காத்திருக்கிறேன்
உன் நிழல் விழும் திசையை நோக்கி...

கணங்களுக்கு ம
த்தியில்
கடை விரித்து எதிர்பார்க்கிறேன்
நீ கடந்து போக கூடும் என்று...

உன்னோடு இருந்த
காலங்களை தேடி அலைகிறேன்
அங்கே நான் எங்கே வாழ்கிறேன் என்று...

உடைந்த கண்ணாடியிலும்
உன் உருவம் பார்க்கிறேன்
என் பார்வை நீதானா என்று...

உதிர்ந்து உலவும்
இலைகளிடம் கேட்கிறேன்
நீ இருக்கும் இடம் அறியுமா என்று...

அலையும் காற்றிடம்
சொல்வதுண்டு
நீ சுவாசித்த
மூச்சு காற்றை மட்டும் சுமந்து வா என்று...

மண்ணும், நெருப்பும்
என்னை திண்ணும் போதும்
இதயம் விட்டு வைக்க கேட்பேன்...

எப்பொழுதும்
உன்னை நினைத்து துடிக்கவே !!


-வித்யாசன்

சாபமிடு ,சாபம்கொடு

சுடும் சொல் ஒன்று: சொல்லி விடு
இல்லையேல் உன் சுட்டு விழியால்
எனை கொன்று விடு...

மறு மொழி ஒன்று கூறிவிடு
இல்லை, எனை கொல்லும்
மருந்தொன்று தந்துவிடு...

ஒருமுறை எனை தண்டித்துவிடு
இல்லை உன் உயிரை
நீயே துண்டித்துவிடு...

தவறுக்கு
மெளன தண்டனை வேண்டாம்
மன்னித்து விடு
மறு ஜென்மம் எனக்கு
அளித்து விடு...

இல்லையேல்
இவன் இன்றோடு
அழிந்து போகட்டும் என்று
சாபமிடு ,சாபம்கொடு !!

அன்பு மலர்

விதி விலக்கா


உனக்கு
உலகமே
நிசப்தமானது
என் மெளனத்தால்...

தனிமை
உலகத்தில்
நீ‡தள்ளப்பட்டாய்
நான் தள்ளிவைத்ததால்..

நீ கதறுகிறாய்
நான் இருதய
கதவை அடைத்ததும்...

உனக்குள்
பூகம்ப புலம்பல்கள்
நான் கோபித்ததும்...

வெறுமையின்
உச்சத்தில் -நீ
நான்- உனை
வெறுத்து விட்டதால்..

எனக்குள்
அனுதாபம் ஏற்படுத்தவில்லை
நீ சொன்ன வார்த்தைகளும்
செய்த செயல்களும்...

துடிதுடித்து
நீ ஏங்கினாலும்
நடிப்பு என்றுதான் தோன்றுது...


எனக்காக வா
இவ்வளவும்
என்று யோசிக்கும்
போது
என் அழகும் கொஞ்சம் கூடுது...

மாண்டு விடுவாயா ?
மறந்து விடுவாய ?

இல்லை...

காய்ந்து விடுவாய ?
கடந்து விடுவாயா ?


இல்லை...

சாய்ந்து விடுவாயா ?
ஓய்ந்து விடுவாயா ?

என்ன செய்ய போகிறாய்
நான் இல்லாது ?

கவி எழுதி எழுதி
கரைந்து போவாயா ?

கன்னம் வீங்க வீங்க
அழுது கவிழ்வாயா ?

உன் கைகள் ஏந்தி
காதல் பிச்சை கேட்க போகிறாயா ?

இன்னும் கேள்விகள்
இரு வானம் அளவுக்கு
இருக்கு-உன்னிடம்...

ஒரு வேளை
நீ இல்லாமல் போன பிறகுதான்
புரிவேனோ
உன் அன்பினை..

எதுவாக இருந்தாலும்
சரி
பொதுவாகவே
நிஜமான காதலுக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா ?

 -வித்யாசன்