சனி, 9 அக்டோபர், 2010

யார் நீ ?


நிலவா?
வட்டமா?

பூஜ்ஜியமா?
உலா வரும் கோளா?

நாணயத்தின் முகமா?
புல்லாங்குழ
லின் துளையா?

பூமி பந்தின் ஒரு தோற்றமா?
காலத்தை நகர்த்தும் சக்கரமா?
 

கொதித்து எரியும் சூரிய தட்டா?
சிப்பிக்குள் ஒலிந்திருக்கும் முத்தா?

உயிர் எழுத்துகளின் ஒலிக்கு உடலா?
நெற்றியில் ஒட்டிருப்பதால் பொட்டா?

புல்லில் படுத்துறங்கும் பனித் துளியா?
உடலில் ஒட்டிக் கொண்டிக்கும் மச்சமா?

தண்ணீரில் தள்ளாடும் தாமரை இலையா?
மயிலிறகின் மையத்தில் இருக்கும் அழகா?

சொட்டு சொட்டாக அவிழ்வதால் மழையா?
என் காதலியின் கன்னத்தில் உதித்த பருவா?

மணிக் கைகளில் விளையாடும் வளையலா?
அங்கும் இங்குமாய் அலைபாயும் கருவிழியா?

எழுத்து வடிவத்திற்கு உயிர் ஈட்டும் உருவமா?
தாயின் உறவை உயிர்பிக்கும் தொப்புள் கொடியா?

அகிலம்   எல்லாம்  நீயே   என்ற  கர்வத்தின்  உச்சமா?

யார் நீ ?

நானா.... ?

சிறு புள்ளி !!

நன்றி

கேள்விக்குறி ?

உன்னை பற்றி என்ன எழுத ?
எழுத்து பிழையாக நான் ...

எதனை ஒப்பிட்டுச் சொல்ல ?
எல்லாமே உனக்கு எஞ்சியதுதான்...

உன்னை குறித்து என்ன சொல்லிவிட முடியும் ?
வார்த்தைகளை தேடி அலையும் என்னால்...

உனக்குகென்று எதை கொடுப்பேன் ?
என்னை தவிர எனதென்று ஏதுமில்லா உலகத்தில்...

எப்போது படித்து முடிப்பேன் ?
ஒவ்வொரு நிமிடமும் ஒரு புத்தகமாய் நீ...

உன் கனவுகளை எப்படி அலங்கரிப்பேன் ?
என் தூக்கத்தை தொலைத்து விழிப்பதால்...

உனது அழகை எங்கே வர்ணிப்பது ?
உன் முன் ஊமையாகும் என் இதழ்களால்...

உன் அசைவுகளை என்னென்று ரசிப்பது ?
அடிக்கொருமுறை நீ ஓவியமாக மாறும் நிமிடத்தில்...

உன் உலகத்தில் எந்த இடத்தில் நான் இருப்பது ?
என் உலகமே நீயான பின்பு ?
 
பாடகன்