சனி, 30 அக்டோபர், 2010

ஏங்கவைக்கும் பொற்காலம்


வானெல்லாம் பருத்தி ஆடை
ஊரெல்லாம் பச்சை வாடை
மரக்கிளை எல்லாம் தேனடை
பூவாசம் பேசும் ஓடை...

ஒத்த வழி பாதைக்கு நான் துணை
ஒரே இடத்தில் கை வீசி நிற்குது தென்னை
யாருக்கு நெய்கிறது சேலையை ஆற்றங்கரை
வயிறு பெருத்து படுத்திருக்கு பெரும்பாறை...

புள்ளி மானாய் துள்ளி குதித்த கிணறு
புது சட்டையில் பிடித்து நழுவிய அயிர மீனு
ஆழ மர ஜடையில் ஆடிய பொழுது
அடித்த அன்னை மடியில் அழுதுகொண்டே படத்துறங்கிய இரவு...

மழை காலத்தில் தட்டான் பிடித்து தலை எடுத்த வீரன்
ஊரின் உயரமான மரத்திலேறி பெயர் எழுதிய சூரன்
ஊதிய வண்ண பலூன்னாய் வட்டமிட்ட திருவிழா
வெட்டிய ஆடு துடிக்கையில் அப்பா வேட்டியில் புதைத்த முகம்...


வீட்டு ஒழுகலில் பாத்திரத்தில் மழை வடித்த கண்ணீர்
சில்லரை சேர்த்து சிரிக்க, சிரிக்க குழுக்கி பார்த்த உண்டியல்
மின்னலில் பூத்த காளான் பறித்து செய்து சுவைத்த சமையல்
ஜன்னல் ஓரம் நின்று ரசித்த வானவில்...

பள்ளி மணி ஓசைக்காக காத்திருந்த பட்டம்
பனை ஓட்டில் வண்டி ஓட்டி பல நாடுகள் சென்று வாங்கிய பட்டம்
ரயில் பூச்சியாய் தோள் பிடித்து சாலை கடந்த சுகம்
வெயில் அப்பிய முகத்தோடு வியர்வை விழுந்த தடம்....

நுனி நாக்கு சிவக்க அப்பத்தா இடித்து தந்த வெற்றிலை பாக்கு
பனியில் குளிர் நடுங்க கருப்பட்டி கருப்பு தேனீர் இனிப்பு
ஆடு, மாடு, கோழி சத்தத்தில் அயர்ந்து தூங்கிய தூக்கம்
ஆவி வந்த கதைகள் கேட்டு பயந்து தொலைத்த தூக்கம்....

இனபேதம் அறியாது இணைந்து விளையாடிய தருணம்
ஒட்டு மொத்த ஊரும் வந்து அழுத என் உறவினரின் மரணம்
என் கிராமத்தை விட்டு வந்த பின்னும், மின்னுகிறது அந்த எண்ணம்
அவசர கதியில் அலுவலகம் புறப்பட, நகர புழுதியில் - தலைதுவட்டியது அந்த பொற்காலம்!!
அன்பு மலர் நன்றி அன்பு மலர் 

MVIDHYASAN@GMAIL.COM/////////////////////////////////////////////////////////

எப்போது வருவாய் விழியோரம்!

உன் கனவுகளில் ஊஞ்லாடுவது
என் நினைவுகளுக்கு நிலா அருகில் இருப்பதாய்..

உன் தூக்கத்தை ரசிப்பது
என் விழிகளுக்கு கவிதை படிப்பதாய்...

உன் தோள் சாய்வது
என் முகத்திற்கு பஞ்சாலையில் பதிப்பதாய்...

உன் விரல் பிடிப்பது
என் கை ரேகைகளுக்கு மருதாணி பூசியதாய்...

உன்னோடு நடப்பது
என் பாதைகளுக்கு பூந்தோட்டமாய்...

உன்னோடு இருப்பது
என் மணித்துளிகளுக்கு குளிர்காலமாய்...

நீ...
இப்போது இருப்பது தூரம்
எப்போது வருவாய் விழியோரம்!! 
அன்பு மலர்
Mvidhyasan@gmail.com./////////////////////////////////////////