செவ்வாய், 25 ஜனவரி, 2011

அவளும், நானும் உரையாடல் - 6

அவள்
என்ன இன்று இந்த பக்கம்

நான்
எப்போதுமே உன் பக்கம் தானே

அவள்
எதை பற்றி இன்றைய படைப்பு


நான்
உன் நகம் பற்றிய படிப்பு

அவள்
நகத்த பத்தியா ? அதுல்ல என்ன இருக்கு ?

நான்
தெரிந்ததை சொல்கிறேன் கேட்க விருப்பமா ?

அவள்
ம்ம்ம்......


நான்

வளரும் வைரம்
நீளும் கோபுரம்
கண்கள் விளையாடும் 20 சதுரங்கம்
வெட்ட வெட்ட எழும் பளிங்கு சுவர்
ரசம் பூசப்படாத கண்ணாடி
திறக்க முடியாத அழகிய பெட்டி
அசைபோடாத பற்கள்
கைப்பிடியில்லா கத்தி
விரல்களின் மூக்குத்தி
தூக்கம் ஏங்கும் தலையனை
கனவு புரளும் படுக்கை
உயிர் உள்ள பனிக்கட்டி
இருதயம் வெட்டும் மண்வெட்டி (மம்பட்டி)
உடையாத முட்டை ஓடு
அதிசய பொட்டல் காடு
ஒட்டி வைக்கப்பட்ட கதவு
தென்றல் இளைப்பாறும் இருக்கை
பேச தெரியாத குட்டி நாக்கு
கற்பனை நிறைந்த வெற்று காகிதம்
பாதம் படாத ஒற்றை படி
நிலா நின்று பார்க்கும் மொட்டை மாடி
அசையாது எரியும் தீபம்
அசையும்ஆமை கூடு
வெள்ளை நிற வழுக்கு பாறை
விரல்களின் மகுடம்
விளக்க முடியாத வரைபடம்
உனது நகம்


அவள்
எப்போது இப்படி எல்லாம் என் நகத்தை பார்த்தீங்க

நான்
நீ அடிக்கடி நகம் கடிப்பாய்
அப்போதெல்லாம் நான் அதில் பாடம் படிப்பேன்

அவள்
நல்லாதான் படிக்குறீங்க

நான்
அப்ப மதிப்பெண் என்ன ?

அவள்
இந்த மதி (போன்ற) பெண் உங்களுக்குதான்

நான்
ம்ம்ம்......

திங்கள், 24 ஜனவரி, 2011

அவளும் நானும் உரையாடல் - 5

அவள்
என்னை மறந்து விட்டீர்களா ?

நான்
என்னை எப்பொழுதும் நான் மறப்பதில்லை

அவள்
நான் என்னை கேட்டேன்

நான்
நானும் அதைத்தான் சொன்னேன்

அவள்

ம்ம்ம்...

நான்
ம்

அவள்
போதும், போதும் இன்று என்ன வருணனை

நான்
எனது கவிக்காக காத்திருக்கும் உன் செவி பற்றி

அவள்
ம்ம்... கேட்க காத்திருக்கு என் செவியே

நான்

ஒரு பக்க சிப்பி
ஒட்டி வைக்கப்பட்ட இரட்டை ரோஜா இதழ்
வண்ணத்து பூச்சியின் ஒற்றை சிறகு
தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விக் குறி ?
குடைந்து செதுக்கப்பட்ட குகை
இரண்டாக நறுக்கப்பட்ட மாதுளை
ஒலிகள் நடந்து செல்லும் சாலை
பறவைகள் கட்ட துடிக்கும் கூடு
முழுமையடையாத கருவறை
ஊர்ந்து செல்ல முடியாத நத்தை
கடலில் கிடைக்காத சங்கு
முளைக்காத விதை
மெல்லிய மேக இலை
வண்ணமில்லாத மயில் தோகை
படமெடுத்தாடும் நாகத்தின் தலை
அழியாத கால் தடம்
நாண்ஏற்றாத வில்
ஆணவம் கொள்ளும் ஆங்கில எழுத்து 3,21
காற்று ஏங்கும் அழகிய விசிறி
நான் மட்டும் நீந்தி குளிக்கும் குளம்

அவள்
அடடா செவிக்கு இத்தனை அர்த்தம் உண்டா?

நான்
நான் கண்டது குறைவுதான்
உன் செவி கொண்ட அழகு கோடிதான்

அவள்
ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்களே

நான்
ம்ம்ம்... கண்டுபிடித்து விட்டாயே

அவள்
அது என்ன ? என்ன ? சொல்லுங்க !

நான்
வழியும் துளி
அதன் நுனியில் ஆடி, பாடுது தோடு எனும் தோழி

அவள்
ம்ம்ம்....

நான்
ம்ம்ம் என்றால்

அவள்
ம்ம்ம்ம்ம்ம்ம......... தான் !

புதன், 19 ஜனவரி, 2011

தை பிறந்தால்

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இந்த வாசகம் உண்மையாகட்டும்

தட்டினால் காற்றில் பறக்கும் தூசாக

நம்மில் தோழ்விகள் மட்டும் வீழட்டும்

விண்ணும் முட்டி உடையும் அளவு

மனித நேயம் பெருகட்டும்

மண்ணில் உழவர் சிந்தும் வியர்வையில்

பொங்கும் கடலின் தாகம் அடங்கட்டும்

முடியும் என்ற நம்பிக்கை கொண்டு

விடும் மூச்சு காற்று வெளியேறட்டும்

இருள் இடிந்து விடியும் பொழுதுகளில்

உரக்க நம் பெயர் சொல்லி சூரியன் உதிக்கட்டும்

அடிமை என்னும் கசப்பு நீங்கி

அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!