புதன், 22 ஜூன், 2011

புரிகிறது


என் கனவுகள் நிரம்பி வழிகிறது
உன் விழி பார்வையில்

இன்னும் நிமிடங்கள் நீள கேட்கிறது
உன்னுடன் இதயம் உடைகையில்

விண்ணுலகம் வாசல் திறக்கிறது
உன் பெண்ணுலகம் நுழைகையில்

உயிர் துளி மெல்ல கசிகிறது
உன் விரல் நுனி உலா வருகையில்

இரு விழி கடலாகிறது
உன் இதழ் படகாய் கவிழ்கையில்

ஐம் புலன்களும் ஆவியாகிறது
உன் அழகில் மூழ்கையில்

மரணங்கள் மயிலிறகாகிறது
உன் மடி மீது தலை சாய்கையில்

உணர்வுகள் புத்தகங்களாகிறது
உன் பாத தடங்களின் அலமாறியில்

நினைவுகள் களவாடுகிறது
உன் பிம்ப நிழல் ஊஞ்சலாடுகையில்

அடடா...
ஆதாம் ஏவால் அர்த்தம் புரிகிறது
நீ அடுத்தடுத்து என்னை உடுக்கையில் !!