செவ்வாய், 19 அக்டோபர், 2010

மூடிய புத்தகமாகவே இரு

உன் இதயத்தை திறந்த புத்தகமாக வைக்காதே,
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...

உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...

உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏலனம் செய்வார்கள்...


உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...

உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...

உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...

உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...

உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...

உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம்  என்று கதவடைத்து விடுவார்கள்...

அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

அன்பு மலர்
------------- Mvidhyasan@gmail.com

கூடாதா ?

உன் விரல் படும் காகிதமாக
பிறந்திருக்க கூடாதா ? 


நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே
உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா?


நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும்
கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ? 


அதிகாலை பொழுதில் வாசலில்
அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா?

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்தி
ருக்க கூடாதா ? 

உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ? 


நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?

 
 மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?

உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ? 


நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?


உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும்
புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ? 


நின் இருதய அறையில் தங்கி செல்லும்
மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ?

பாதைகள் எல்லாம் காத்திருக்கும்
உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ?


நீ கற்பனை செய்யும் தருணத்தில்
அதன் கருப் பொருளாக கருவாகியிருக்க கூடாதா ?


என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக

 
என்னை !

 
நீ... 

 
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

ஐ லவ் யூ